1
அஸ்வனி
எட்டி
ஆலயம்: கூத்தனூர் , ஸ்ரீரங்கம், திருத்துறைப் பூண்டி
2
பரணி
நெல்லி
லஷ்மி முருகன், விஷ்ணு, போன்ற தெய்வங்களுக்கு உகந்தது. ஆலயம்:- பழனி முருகன், போரூர் ராமனாதீஸ்வரர் , மடிப்பாக்கம் சிவா– விஷ்ணு ஆலயம்
3
கிருத்திகை
அத்தி
தத்தாத்திரேயர் மற்றும் விஷ்ணுவுக்கு உகந்தது ஆலயம்: சேங்காலிபுரம் தத்த குடீரம் ஆலயம், திருவண்ணாமலை அகத்தீஸ்வரர் ஆலயம்
4
ரோகினி
நாவல்
ஆலயம்:- திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் மரம் உள்ள ஆலயம்
5
மிருச்சிகம்
கருங்காலி
6
திருவாதரை
செங்கருங்காலி
7
புனர்பூசம்
மூங்கில்
8
பூசம்
அரசு
9
ஆயில்யம்
புன்னை
புன்னை ஸ்ரீநிவாசப்பெருமாள் ஆலயம், தூத்துக்குடி / மாரியம்மன். மாரியம்மனின் பல ஆலயங்கள்
10
மகம்
ஆலம்
11
பூரம்
பலசம்
12
உத்திரம்
அலரி
13
அஸ்தம்
அத்தி
தல மரம் உள்ள ஆலயம்: திருவெற்றியூர் ஆதிபுரீஸ்வரர்
14
சித்திரை
வில்வம்
சிவபெருமான். பல சிவாலயங்கள்
15
சுவாதி
மருதம்
தல மரம் உள்ள ஆலயம்: திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர், திருவெற்றியூர் ஆதிபுரீஸ்வரர்
16
விசாகம்
விளாமிச்சை
17
அனுசம்
மகிழம்
18
கேட்டை
பிராய் அல்லது குட்டி பலா
19
மூலம்
மரா (அரச மரம் போன்றது )
20
பூராடம்
வஞ்சி (ஒருவித பூ மரம்)
21
உத்திராடம்
பலா
22
திருவோணம்
வெள்ளெருக்கு
23
அவிட்டம்
வன்னி
துர்க்கை மற்றும் சனி பகவானுக்கு உகந்தது– ஆலயங்கள்:-
சென்னை மருதேஸ்வரர் ஆலயம், விருதாச்சலத்தின் விருத்தகிரீஸ்வரர், மகு டேஸ்வரர்
24
சதயம்
கடம்பு
முருகன் மற்றும் மகாவிஷ்ணுவிற்கு உகந்தது– ஆலயங்கள்:- திருக்கடம்பூர் அமிர்தகடேஸ்வர் , மதுரை சோமசுந்தரேஸ்வர்
25
பூரட்டாதி
தேமா மரம் அல்லது கரு மருது (ஒருவித பூ மரம்)
26
உத்திரட்டாதி
வேம்பு அல்லது வேப்ப மரம்
அம்மனுக்கு உகந்தது
ஆலயம்:- பொதுவாகவே அம்மன் மற்றும் மாரியம்மன் ஆலயங்கள்
27
ரேவதி
இலுப்பை
அஷ்ட லஷ்மிக்கு உகந்தது
ஆலயம்:-திருச்சங்கோடு அர்த்தநாரீஸ்வரர் , திருஇரும்பை மாகாளம் (பாண்டி)
அடுத்தக் கேள்வி இது. ஒருவருக்குத் தேவையான நட்சத்திர மரத்தை எங்கு போய் தேடுவது? வசதி இருந்து வீடுகளில் தோட்டமும் வைத்து உள்ளவர்கள் தமது நட்ஷத்திரத்துக்கான செடிகளை வாங்கி வைத்து மரமாகவே வளர்க்கலாம். அதன் மூலம் வீட்டிலேயே வழிபாட்டை தினமும் தொடரலாம்.
அத்தி, வேம்பு, ஆல மரம், நெல்லி மரம், மகிழ மரம், மற்றும் வில்வம் போன்ற மரங்கள் பல இடங்களிலும் உள்ள ஆலயங்களில் உள்ளன. அந்த நட்ஷத்திரத்தை சேர்ந்தவர்கள் அங்கு சென்று அவற்றை வழிபடலாம்.
சேலம் நகரில் உள்ள சுகவனேஸ்வரர் ஆலயத்தின் எதிரில் சுபிக்ஷா பிருந்தாவனம் என்ற மிகப் பெரிய தோட்டம் உள்ளது. அதில் அனைத்து நட்ஷத்திரங்களுக்கும் உரிய 27 வித மரங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றனவாம். அது போலவே குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் ஆலயத்தின் அருகில் உள்ள தோட்டத்தில் 27 நட்சத்திர மரங்கள் உள்ளனவாம். திருச்சி நீதிமன்றத்துக்கு அருகே ஐயப்பன் ஆலயத்தில் 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் நடப்பட்டு வளர்க்கிறார்களாம். தம்முடைய நட்ஷத்திரங்களுக்கு உரிய மரங்களை தாம் வசிக்கும் ஊரில் இல்லை என்றால் இந்த இடங்களுக்குச் சென்று மர வழிபாடு செய்யலாம்.
அதைப் போலவே மயிலாடுதுறையிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் உள்ள அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கண்காணாதீஸ்வரர் எனும் ஆலய பிராகாரங்களில் வளர்க்கப்பட்டு வருவதாக கூறப்படும் 27 நட்ஷத்திரங்களுக்கு உரிய மரங்களை வழிபடலாம் என்கிறார்கள்.
மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் பூங்காவிலும் நட்சத்திர மரங்கள் நடப்பட்டுள்ளன என்கிறார்கள். விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோரிமேட்டிற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி என்னும் கிராமத்தில் சனீஸ்வரர் ஆலயத்தின் சூரியன் தோட்டம் எனும் இடத்திலும் 27 நட்சத்திர மரங்கள் உள்ளனவாம்.
மரவழிபாட்டை எப்படி செய்வது ? தமது ஜென்ம நட்ஷத்திரத்துக்கு உகந்த மரத்தை தெரிந்து கொண்டு, வருடத்துக்கு ஒரு முறையாவது அங்கு சென்று அந்த மரத்துக்கு குங்கும சந்தனம் இட்டு, பூக்களை அதன் மீது தூவி, அந்த மரத்தை பதினோரு முறை பிரதர்ஷனம் செய்து, அதன் வேருக்கு பாலையும் நீரையும் ஊற்றி அபிஷேகம் செய்து, அதை நமஸ்கரித்துவிட்டு அங்குள்ள தேவதையிடம் தமது பாவங்களைக் களைந்து தமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டு வர வேண்டும். பூஜை செய்து வழிபட்டதும் அந்த மரத்தின் அடியில் அல்லது அதன் பக்கத்தில் குறைந்தது ஒரு மணி நேரமாவது இருக்க வேண்டும். அப்போதுதான் அவரவர் இழந்திருந்த ஜீவசக்தி மீண்டும் அவர்களுக்கு அந்த மரங்களில் குடியுள்ள தேவதைகள் அந்த மரத்தின் இலைகள் மற்றும் கிளைகள் மூலம் வெளிப்படுத்தும் அதிர்வலைகளில் இருந்து கிடைக்கும். அதன் மூலம் அவர்களை சூழ்ந்திருந்த பாவங்களின் சுமைகளும் விலகத் துவங்கும். இதையே நட்சத்திர மர வழிபாடு என்கிறோம்.
No comments:
Post a Comment