அந்த காணொளியை நீங்கள் இன்னொருமுறை பாருங்கள், புரியும்.
நல்ல மனிதன் ஐயா அவர்.
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், அவர் எத்தனை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை பயந்து தவிர்த்திருக்கிறார்?
அத்தனை பத்திரிக்கை சந்திப்பையும் துணிச்சலாக எதிர்கொண்டு, துப்பாக்கி தோட்டாக்களை விட வேகமாக வரும் பத்திரிக்கையாளர் கேள்விகளுக்கு அதே வேகத்தில் பதிலளித்த ஒரு வீரமான, வெகுளியான மனிதர்.
அவரை எந்த இடத்திலும் அரசியல்வாதியாக நான் பார்க்கவில்லை.
ஒருமுறை அதாவது கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது எங்க ஊருக்கு வந்திருந்தார்.
ஆனால் அவர் வருவதற்கு காலதாமதம் ஆகிவிட்டது, பெரும் மக்கள் கூட்டம் அவருக்காக மாலை 6 மணிமுதல் காத்திருந்தது, ஆனால் அந்த மனிதர் வந்தது என்னவோ 9.15 இருக்கும்.
ஆனால் கூட்டம் கலையவேயில்லை. மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே தான் இருந்தது.
9.15-க்கு வந்த பிறகு வரவேற்பு உரை மற்றும் வேட்பாளர் அறிவிப்பு விசயங்களை தொடர்ந்து, அவர் பேச ஆரம்பிக்கும் போது மணி 9.35 இருக்கும்.
அவர் பேச பேச மக்கள் ஆரவாரத்தில் திளைத்திருந்தனர்.
திடீரென ஒரு மணிசப்தம். அதாவது எங்கள் ஊரில் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஒருமுறை கோவில் மணி ஒரு பாடலை பாடியபடி மணியோசையையும் 20 விநாடிகளுக்கு அடிப்பது வழக்கம். ஆனால் அதனை பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே அடிக்கும் வகையில் மாற்றி வைத்திருந்தார்கள், (வெளியூர் செல்லும் மக்கள் குறித்த நேரத்தில் பேருந்தை பிடிப்பதற்காக 10 நிமிடங்கள் முன்னதாகவே ஒலிக்கும்)
அன்றும் அவ்வாறே அந்த சப்தம் எழும்ப, தலைவர் டென்சனாகி , யார்டா அது பேசிட்டு இருக்கும் போது மணி அடிக்கிறதுனு கேட்க, மக்கள் அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
இந்நிலையில் அருகிலிருந்தவர்கள் அந்த சப்தத்துக்கான காரணத்தை கூறவும், தலைவர் என்ன செய்தார் தெரியுமா?
ஓ, அப்படினா இது 10 மணிக்கு அடிக்கக் கூடிய மணியா? அப்போ தேர்தல் ஆணையம் கொடுத்த நேர எல்லை முடிந்துவிட்டது, அதனால் கூட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்றார்.
ஆனால் அருகிலிருந்தவர்களும், மக்களும், " தலைவா, அது பத்து நிமிடம் முன்னதாகவே அடித்துவிடும், அதனால இன்னும் 10 நிமிடம் இருக்கு, நீ பேசு தலைவா, நாங்க கேக்குறோம்னு " கத்துனாங்க.
அதுக்கு அந்த மனுசன் என்ன சொன்னாரு தெரியுமா வெகுளிதனமா,
இன்னும் 10 நிமிசம் இருக்குது, ஆனால் என்னய பாக்குறதுக்கு பக்கத்து கிராமத்துல இருந்தெல்லாம் சாயங்காலம் 5–6 மணிக்கெல்லாம் வந்து காத்துக்கிட்டு இருக்கீங்க, அதுமட்டுமில்லாம பக்கத்து கிராமத்துக்கு எல்லாம் இரவு 10 மணிக்கு மேல பஸ் கிடையாதுனு கட்சிக்காரங்க சொன்னாங்க, அதனால நீங்க இப்போ கிளம்புனாதான் இன்னும் 10 நிமிசத்துல அந்த பேருந்துகளை பிடிக்க முடியும்,
அதனால போய்ட்டு வாங்க, தாமதமா வந்தது என்னோட தப்பு தான் மன்னிச்சுக்கங்க,
பத்திரமா வீட்டுக்கு போய்ட்டுவாங்கனு , சொன்னாருயா அந்த மனுசன்.
அவரது கோபத்தை கோமாளித்தனமாவே காமிச்சிட்டீங்களே?
கோபம் இருக்கும் இடத்துல தான்யா குணமும் இருக்கும்.
No comments:
Post a Comment