Tuesday, November 15, 2022

*திவ்யதேசங்கள்!*

 ஒரு முறை பிரம்மா, மஹாவிஷ்ணுவிடம் "வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீர் வியாபித்திருக்கிறீர்?'' என்று வினவ,

*ஸதம்வோ அம்பதாமானி ஸப்தச* என்ற வேத வாக்யத்தின் மூலம் உணர்த்தினார் மஹாவிஷ்ணு!
ஸதம் என்றால் நூறு;
ஸப்த என்றால் ஏழு;
*ஆக, எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திவ்யதேசங்கள் 107!*
*அவன் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்தை (பரமபதம்) சேர்த்தால் 108!*
"ஈரிருபதாஞ்சோழம்; ஈரொன்பதாம் பாண்டி;
ஓர் பதின்மூன்றாம் மலைநாடு;
ஓரிரண்டாம் சீர்நாடு; ஆரோடீரெட்டுத் தொண்டை;
அவ்வட நாடாறிரண்டு;
கூறு திருநாடொன்றாக்கொள்!"
அதாவது,
சோழநாட்டில் 40
பாண்டியநாட்டில் 18
மலைநாட்டில் 13
நடுநாட்டில் 2
தொண்டை நாட்டில் 22
வடநாட்டில் 12
திருநாடு (வைகுந்தம்) 1
*ஆக, 108 திவ்ய தேசங்கள்!*
இதில்,
*வைகுண்டத்தில் ஓடும் வ்ரஜா நதியே காவிரி! வைகுண்டமே ஶ்ரீரங்கம்! வஸுதேவரே ரங்கன்! பிரணவமே விமானம்! விமானத்தின் நான்கு கலசங்களே நான்கு வேதங்கள்!*
*பள்ளிகொண்டிருக்கும் அரங்கனே ப்ரணவத்தால் அறியப்படும் பரம்பொருள்!* *என்று முதலாவது திவ்யதேசமான "ஶ்ரீரங்கத்தை" போற்றுகிறது வேதம்!*
-
"காவேரி விருஜா ஸேயம்,
வைகுண்டம் ரங்கமந்திரம்;
ஸ வாஸுதேவோ ரெங்கேசஹா,
ப்ரயத்யஷம் பரமம்பதம்;
விமானம் ப்ரணவாஹாரம்,
வேதஷ்ருங்கம் மஹாத்புதம்;
ஶ்ரீரங்கசாயி! பகவான் ப்ரணவார்த்த ப்ராகாசந:"
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...