புறநகர் சென்னையில் செங்கல்பட்டுக்கு அருகே ஒரு கிராமத்தில், சில வருடங்களுக்கு முன் ஒரு அரசு பள்ளிக்கு படிப்பு சம்மந்தமாக உதவ சென்றிருந்த போது, பெல் அடித்ததும் பக்கத்தில் இருந்த சவுக்கு காட்டு பக்கம் பசங்க செல்வதை பார்த்தேன்....
"எங்க சார் போறாங்க" என அருகே இருந்த ஆசிரியரை கேட்டேன்
" அது ரீசஸ் க்கு போறாங்க சார்...."
"ஆமாம் சார்..."
ஒரு நொடி யோசித்து....
"அப்போ பொம்பள புள்ளைங்க?"
"அதுக்கு தான் சார் இப்ப பல வருட பெடிஷன் போட்டு அதோ அந்த டாய்லெட் இப்ப தான் கட்டி முடித்தோம்...."
"இப்ப தானா ..அப்போ இவ்வளவு நாளு?"
"அவுங்களும் வெளியே தான்"
நான் அவரை புருவம் உயர்த்தி உற்று நோக்கினேன்... என் பார்வையின் அர்த்தம் புரிந்து கூட இருந்த இன்னொரு ஆசிரியர்...
"ராஜகோபால் சார்.... புரியுது....அதனால தான் ஆறாவது ஏழாவது க்கு மேல பொம்பள பிள்ளைகளை படிக்க அணுப்பல இங்க யாரும்.... இப்ப கட்டிட்டோம்ல ..இனிமே வருவாங்க..." என்று முடித்தார்
நான்கு வருடங்களுக்கு முன் நான், கஜா புயலுக்கு நிவாரணம் வழங்க முகாம்கள் சிலவற்றுக்கு சென்றிருந்த போது..... பொதுவாக நிவாரணம் வழங்கி மக்களுடன் பேச்சு தந்த போது
"டாய்லெட் க்கு எங்க இங்கேயே வா...."
"இங்க டாய்லெட் ஒன்னும் பெருசா இல்ல சார்.... வெளியே தான் ஒதுங்குறது" என தெரிவித்தார்கள்
எங்கள் மாற்றம் அறக்கட்டளை பற்றி ஏழை மாணவ மாணவிகளுக்கு தெரிவித்து நல்ல மதிப்பெண் எடுத்தால் இலவசமாக படிக்க வைக்கிறோம் என சொல்வதற்காக, இரண்டு வருடத்திற்கு முன்பு டெல்டா ஏரியாவில், கிராம பள்ளி ஒன்றுக்கு +2 ரிசல்ட் சமயம் சென்றிருந்தேன்.... பள்ளி முதல்வரை சந்தித்து வெளியே வந்து ஒருவரிடம் டாய்லெட் இங்கே எங்க என கேட்டபோது...."அது வந்து சரியா இல்லை சார் என" தலையை சொரிந்தார்.
அதன் பிறகு, உறவினர் பெண் ஒருவர்க்கு அவசரத்துக்கு, ஹைவே ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் கில் டாய்லெட் வசதி மறுக்க பட்டதும் அதை தொடர்ந்து பதிவுகள் நான் போட, அதை நண்பர்கள் பகிர்ந்து அது ரிலையன்ஸ் மேலிடம் காவல்துறை கமிஷ்னர் Human Rights வரை சென்று அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டதும் உங்களில் பலர் அறிவர். But bottomline, அவசரத்துக்கு பெண்களுக்கு டாய்லெட் இன்னும் பெருமளவில் பொது இடங்களில் மறுக்க படுகிறது.
எதுக்கு Intentional Toilets Day என கேட்பவர்களுக்கு இதெல்லாம் சிறிய பதில்கள்.
இந்த நிலையில் தான் இருக்கிறோம் நாம் !!
குறைந்த பட்ச வசதியான சொந்த டாய்லெட் இல்லாத மக்கள் நம் நாட்டில் பல கோடி
சுகாதாரமற்ற டாய்லெட் இல்லாமல் தொற்று நோயால் அவதிப்படும் மக்கள் குறிப்பாக பெண்கள் பல கோடி...
இதுக்கு யார் எந்த ஆட்சியில் முழு தீர்வு வழங்க இருக்கிறார்கள் என்பது நாட்டில் விடையில்லா வினாக்களில் ஒன்று.
நம்ம என்ன செய்ய முடியும் ? என்று கேட்போர் க்கு...
குறைந்தபட்சம் நம்மை சுற்றி இப்படி இருக்கும் அவலங்களை பிரசுரிக்க செய்யுங்கள்.... பொது கழிப்பறைகள் சுத்தம் இல்லாமல் இருந்தால் பராமரிப்பாளர்களை கேள்வி கேளுங்கள்.... பதிவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் இடம் நேரத்துடன் போடுங்கள்...
ஜோக்கர் திரைப்படத்தில் ஒரு காட்சி...
"4G ஃபோன் டா பத்திரம்...!" என உடன் வந்தவரிடம் ஃபோனை தந்துவிட்டு குளத்தில் அலம்ப உட்காருவார் ஒருவர்
இதை விட பல கிராமங்களின் நிலையை
அருமையாக
விளக்க முடியாது.
No comments:
Post a Comment