*இத்தனை கோடிக்கணக்கான மக்களையும் ஒரே இறைவன் தனித்தனியாக எப்படி காண்பான். எப்படி ஒவ்வொருவரையும் தனித்தனியாக கட்டுப்படுத்துவான்..*..
*வெரி சிம்பிள்.*
ஒரு மாநகரில் ஒரே நெட்ஒருக்கில் லட்சக்கணக்கான சிம் கார்டுகள் உண்டு. ஒரு சிம்கார்டுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை ஜிபி டேட்டா என்று
வைத்துக் கொள்வோம். லட்சக்கணக்கான சிம் கார்டுகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் நிர்வகிப்பது ஒரே ப்ரோக்ராம் தான். ஆனாலும் உங்களுக்கு வழங்கப்பட்ட டேட்டா முடிந்ததும் ஆட்டோமாட்டிக்காக இணைய வேகம் குறைந்து விடுகிறது.
செய்துள்ளீர்கள் என்ற புள்ளி விபரத்தையும் எடுத்து கொள்ளலாம். லட்ச கணக்கான இணைப்புகள் ஏன் கோடிக்கணக்கான இணைப்புகள் இருந்தாலும் ஒரே ஒரு software program ஒவ்வொரு தனித்தனி இணைப்பையும் எப்படி திறமையாக கையாளுகிறது.
ஒன்றரை ஜிபி முடிந்து விட்டால் தலைகீழாக நின்றாலும் மேற்கொண்டு அதிவேக இணைப்பை பெற முடியாது. அதாவது அந்த புரோக்ராமை ஏமாற்ற முடியாது.
ஒரே ஒரு புரோகிராம் எப்படி கோடிக்கணக்கான இணைப்புகளை ஒரே நேரத்தில் தனித்தனியாக கையாளுகிறதோ அது போலத்தான் இறைவனும் கையாளுகிறான்.
அது போல ஒருவரது பாவ புண்ணிய கணக்குகள் எப்படி இறைவனால் தனிதனியாக காண முடிகிறது
அதுவும் இது போல தான்
நீங்கள் உங்கள் இன்டர்நெட் வேலிடிட்டி முடிந்த பிறகு ரீசார்ஜ் செய்ய உங்களுக்கு மட்டுமேயான சிறப்பு சலுகையை தேடும் போது நீங்கள் அந்த சிம் கார்டை எத்தனை ஆண்டுகளாக பயன் படுத்துகிறீர் என்பதை பொறுத்தே நொடியில் தனித்தனியாக அடையாளம் கண்டு அவர்களின் கடந்த கால
பயன்பாட்டினை ஆராய்ந்து அதற்கு ஏற்ப சலுகை வழங்குகிறது. இதற்காக அது எடுத்துக் கொள்ளும் நேரம் சில நொடிகள் தான்.
*மனிதன் வடிவமைத்த புரோக்ராமே இவ்வளவு செய்யும் போது , "மனிதனையே வடிவமைத்த இறைவன்" எவ்வளவு செய்வான்*
...
*இதை எண்ணி , இறைவன் எப்போதும் நம்மையும் கண்காணித்து கொண்டு இருக்கிறான் என அச்சம் கொண்டு பாவத்தில் இருந்து விலகி இருப்போம். இறைவனுக்கு உண்மையாய் வாழ்வோம்...*.
No comments:
Post a Comment