Wednesday, November 16, 2022

துக்ளக் பத்திரிக்கைல ஒன்னரைப்பாக்க நாளேடு என்று ஒரு பகுதி வரும். அது போல தான் இது.. படியுங்கள், சிரிப்பு வந்தால் சிரியுங்கள்.

 தம்பி இந்த பதினெண் கீழ்க்கணக்கு......

ஐயா நான் கணக்குல ரொம்ப வீக்குங்க.
திருக்குறள்ல.......
தொண்டை கட்டியிருக்குறதுனால குரல் கொஞ்சம் கம்முதுங்கையா.
நான்மணிக்கடிகை......
இன்னும் நாலு மணி அடிக்கல்லை சங்க. நாலு மணி ஆனதும் கண்டிப்பா சொல்றேனுங்க.
அதில்லை நாலடியார்.....
அதான் சொன்னேனே ஐயா, மணி இன்னும் நாலு அடிக்கவில்லை என்று.
போகட்டும் இன்னா நாற்பது......
அது இன்னா நாற்பது???? இருநூறுக்கு ஒரு ரூபா கொறஞ்சாலும் பேஜார் பண்றாங்க.
சரி அந்த இனியவை நாற்பது.....
அதான் சொன்னேனே ஐயா. இரு நூறுக்கு ஒரு ரூபா கொறஞ்சாலும் பேஜார் ஆயிடுறாங்கன்னு. பொறவு நாற்பது எப்படி இனிக்கும்????
பழமொழி நானூறு.......
அதெல்லாம் கட்டுப்படி ஆவாதுங்க. ஒன்லி டூ ஹண்ட்ரட் ரூபா தான் நமக்கு கட்டுப்படி ஆவுங்க.
ஆசாரக்கோவை.......
ஆ ராசா கோவை இல்லீங்க. அவரு தொகுதி நீலகிரி.
திரிகடுகம்......
உங்களுக்கு கடுகு ஆகாதுங்களா???
மதிய உணவு கடுகு இல்லாமலேயே சமைக்க சொல்றேன்.
சிறுபஞ்சமூலம்......
ஆமாங்க. கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு. ஆனால் டாக்டர் ஆப்பரேஷன் வேண்டாம். மருந்து மாத்திரைகளிலேயே குணப்படுத்துறேன்னு சொல்லிட்டாரு.
முதுமொழிக் காஞ்சி......
அதுமட்டும் முடியாதுங்க. நீங்க என்ன தான் சமாதானம் சொன்னாலும், மக்கள் காஞ்சி போனாலும், மும்மொழி கொள்கையை நாங்கள் ஒரு போதும் ஆதரிக்கமாட்டோம்.
May be an image of 3 people, people sitting and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...