அக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை
அக்னி நட்சத்திரம் எனப்படும் வெயில் காலம் இன்று மே 4 பகல் 02.03 மணிக்குத் தொடங்கி இன்னும் இருபத்தி ஆறு நாட்களுக்கு மக்களை வாட்டி வதைத்து மே 28 ஆம் தேதி இரவு 09.10 மணியளவில் முடிவடைய இருக்கிறது.
இதில் அதிவெப்ப காலமான கத்தரி எனப்படுவது மே 12 ம் தேதி முதல் மே 25 வரையிலான இரண்டு வார காலமாகும்.
இதை முன்னேழு காலம் , பின்னேழு காலம் எனக் கூறுவார்கள்
வானியல் சாஸ்திரப்படி சூரிய மையக்கோட்பாடு பூமி மையக்கோட்பாடு என இரண்டு அமைப்பு விதிகள் உள்ளன.
இதில் நமது பார்வைக் கோணத்தின்படி சொல்லப்படும் பூமி மையக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஜோதிடத்தில் மேஷராசியில் சூரியன் நுழையும் காலம் சித்திரை ஒன்று எனக்கணக்கிட்டு தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?
-------------------------------------------------------------
உண்மையில் சூரியன் நிலையாக ஒரு இடத்தில் இருக்க நமது பூமிதான் இந்த
மேஷ ராசியில் நுழைகிறது,
ஒரு சிலர் சூரியனுக்கு அருகில் பூமி செல்லும்போது கோடைகாலம் ஏற்படுவதாக தவறாக நினைக்கிறார்கள்.
அது உண்மையல்ல. பருவகாலங்கள் பூமி சாய்ந்திருக்கும் கோண அளவின்படியே உண்டாகின்றன.
பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தின் அடிப்படையில் நடப்பதில்லை.
பூமியின் சுழற்சியின்படி நமது இந்தியப் பகுதியில் இந்த மாதத்தில் நேர் செங்குத்தாக சூரியக் கதிர்கள் பட்டு அக்னிநட்சத்திரமாக மாறி இந்த அதி வெப்பத்தை உண்டாக்கி நம்மை அலற வைக்கிறது.
உண்மையில் ஆடி தொடங்கி ஆவணி மற்றும் புரட்டாசி சிறிது வரை நமது பூமி சூரியனுக்கு அருகாமையிலும் தை மாதத்தில் அதிகமாக விலகியும் இருக்கிறது.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த மூன்றும் சூரியனுக்கு உரிய நட்சத்திரங்கள். ‘அக்னிர்ந: பாது க்ருத்திகா’ என்கிறது வேதம். அதாவது, கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய தேவதை ‘அக்னி’. அதனால் இந்த நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் நேரமானது அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றது. கார்த்திகை நட்சத்திரம் துவங்குவதற்கு இரண்டு பாதங்கள் முன்பாக அதாவது, பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்திற்குள் சூரியன் நுழையும் காலம் முதல் கார்த்திகை முடிந்து இரண்டு பாதம்வரை அதாவது ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதம்வரை சூரியன் சஞ்சரிக்கும் கால அளவினை அக்னி நட்சத்திர காலம் என்று அழைப்பார்கள்.
ஜோதிட சாஸ்த்திரப்படி மேஷம் சிம்மம் தனுசு இவை மூன்று நெருப்பு ராசிகள் . இதில் அதிக பலமிக்கது சர ராசி, நெருப்பு ராசி எனப்படும் மேஷராசி ஆகும்.
இந்த மேஷ ராசியில் நெருப்புக் கிரகமான சூரியன் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் சுடர் விட்டு பிரகாசிக்கும் போது ,
சித்திரை 21. (04.05.2017) 20.06. நாழிகைக்கு பகல் 14.03 மணிக்கு ஆதவனின் ஆட்டம் (அக்னி நட்சத்திரம்)ஆரம்பிக்கிறது.

சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை முழுக்க நம்மைச் சுட்டெரித்து சந்திரனின் ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தை தாண்டும்போது வைகாசி 14. (28.05.2017) இரவு 21.10 மணிக்கு அக்கினி நட்சத்திரம்
முடிவடைகிறது.
இதில் சூரியன் தனது சுயநட்சத்திரமான கிருத்திகையில் செல்லும் காலமே அதிக வெப்பமான நாட்களாக இருக்கும். அதற்கு முந்தைய பரணி நட்சத்திர காலத்தை முன் கத்தரி என்றும் பிந்தைய ரோகிணி நட்சத்திர காலத்தை பின் கத்தரி என்றும் சொல்வதுண்டு.
இந்த கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதையாக அக்னியை நமது வேதஜோதிடம் சொல்வதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் இந்த வருடம் முன்கூட்டியே ஆரம்பித்து விட்டதோ என்று சந்தேகப் படும் அளவிற்கு நூறு டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்திக் கொண்டிருப்பதால் இப்போது தொடங்கும் கத்தரியைப் பற்றிக் புதிதாகக் கவலைப் படத் தேவையில்லை.
சில நிலைகளில் கத்திரி முடிந்த பின்பும் வெயிலின் உக்கிரம் நீடிப்பதுண்டு. இந்த வருடமும் அதுபோல ஜூன் முதல் வாரத்தில் அக்னியை விடக் கடுமையான வெயில் இருக்கும். அதே நேரத்தில் சென்ற வருடத்தை விட இந்த வருடம் வெப்பம் குறைவாகவே இருக்கும். கோடைமழை பெய்து அனைத்தையும் தணிக்கும்.

அக்னி (கத்திரி ) யில் என்ன செய்யலாம்?
என்ன செய்யக் கூடாது?
---------------------------------------------------------------------------
இந்த அக்னி நட்சத்திர சமயத்தில் சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும். பேச்சு வழக்கில் கத்திரி வெயில் கொளுத்துகிறது என்று சொல்வதைக் கேட்டிருப்போம். வெயில் அதிகமாக இருக்கும் என்பதால்தான் இந்த நேரத்தில் பள்ளிகளுக்குக் கூட விடுமுறை அளிக்கிறார்கள். வெப்பத்தின் தாக்கத்தால் உறவினர்களுக்கு சிரமம் உண்டாகலாம் என்ற ஒரு காரணத்தினால்தான் அந்நாட்களில் சுபநிகழ்ச்சிகள் செய்வதை பெரியவர்கள் தவிர்த்து வந்தார்களே அன்றி வேறு எந்த காரணமும் இல்லை.
அக்னி நட்சத்திர காலத்தில் சுபநிகழ்ச்சி களைச் செய்யக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்லவில்லை.

சூரியனின் ஒளிதான் நம் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன்படி சூரியனின் அதிஉச்ச காலமான அக்னி நட்சத்திரத்தில் சில சுபகாரியங்களைச் செய்ய வேண்டாம் என்று நமது ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
அதன்படி இந்த அக்னி நட்சத்திரத்தில் கத்திரி வெயிலின் போது வீடு கட்ட பூமிபூஜை செய்வது, வீடு கட்ட ஆரம்பிப்பது மற்றும் அதற்கான கிணறு வெட்டுதல், விவசாய விதைப்பு வேலைகள், மரம் நடுதல், குழந்தைகளுக்கு மொட்டையடித்தல், காது குத்துதல் போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது.
அதேநேரத்தில் கட்டிய வீட்டில் குடிபுகுதல், வாடகை வீடு மாறுதல், பெண் பார்த்தல், நிச்சயதார்த்தம செய்தல் , திருமணம் செய்தல், சீமந்தம், உபநயனம் போன்ற சுபகாரியங்கள் செய்யத் தடையில்லை.
வெயில் சுட்டெரிக்கும் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் வசதி உள்ளவர்கள் எளியவர்களுக்கு அன்னதானம் தண்ணீர்ப் பந்தல் மோர் பானகம் போன்றவைகளை வழங்குவதன் மூலம் கோடிப் புண்ணியம் பெறலாம்.
ஜோதிடரீதியாக இது சில விஷயங்களுக்கு தோஷகாலம் எனப்படுவதால் பழமையான சிவன் கோவில்களில் சர்வேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்விப்பது சகல தோஷத்தையும் நீக்கும். அதன் பிறகு சுப நிகழ்ச்சிகளை தொடங்கலாம்.

அக்னிக்கு மட்டும் உள்ள தனிச்சிறப்பு என்ன?
---------------------------------------------------------------------------
நீர் நெருப்பு காற்று ஆகாயம் பூமி எனப்படும் பஞ்ச பூதங்களில் நெருப்பு எனப்படும் இந்த அக்னிக்கு மட்டும் ஒரு தனிச் சிறப்பு உண்டு.
அது என்னவெனில் தன்னிடம் சேரும் ஒரு பொருளை தானாகவே மாற்றிக் கொள்வது இந்த பஞ்சபூதங்களில் அக்னி மட்டுமே. உதாரணமாக ஒரு மரக்கட்டையை நீரில் போட்டால் அது மரக்கட்டையாகவே இருக்கும். நாளாக நாளாக வேண்டுமானால் சிறிது உப்பிப் போய் அது உருமாறலாம். ஆனால் என்றைக்கும் அது நீரில் மரக்கட்டையாகவே இருக்கும்.
அதே கட்டையை மண்ணில் தூக்கிப் போட்டாலும் மரக்கட்டைதான். அது காற்றில் கிடந்தாலும் ஆகாயத்தில் மிதந்தாலும் கட்டையாகவே இருக்கும்.
ஆனால் அக்னி எனும் நெருப்பில் போட்ட அடுத்த நொடி அது நெருப்பாக மாறிப்போய் விடும்.
எந்தப் பொருளை நெருப்பில் இட்டாலும் அந்தப் பொருளை தானாகவே மாற்றிக் கொள்வதால்தான் பஞ்சபூதங்களில் அக்னிக்கு தனியிடம் உண்டு,
இதன்பொருட்டே யாகங்களில் அக்னி பிரதானமாக்கப் படுகிறது.
தெய்வங்களுக்கு நம்மால் கொடுக்கப்படும் ஆகுதிப் பொருட்கள் அதேநிலையில் தெய்வங்களிடம் சேர வேண்டும் என்பதற்காகவே நாம் அக்னியில் ஆகுதிப் பொருட்களை இடுகிறோம்.
அக்னி தேவனும் நமக்கும் தெய்வங்களுக்கும் இடையிலான பிரதிநிதியாக இருந்து நாம் பணிவுடன் சமர்ப்பிக்கும் ஆகுதிப் பொருட்களைத் தெய்வங்களிடம் கொண்டு சேர்க்கிறார்.

No comments:
Post a Comment