Thursday, June 1, 2017

ஒரு விஷயத்தை நினைவு கூர்கிறேன்.


சென்னை சில்க்ஸ் தீவிபத்தை பிரபல துணிக்கடையில் தீவிபத்து என்று தமிழ் செய்திச் சேனல்கள் கூறிச்செல்லும்போது ஒரு விஷயத்தை நினைவு கூர்கிறேன்.
சில வருடங்களுக்கு முன்னர் கோவையில் போத்தீஸ் துணிக்கடை முன்பு மாநகராட்சி ஒரு நோட்டீஸ் ஒட்டியது. அந்தக் கட்டிடத்தில் நூறு சதவிகித விதிமுறை மீறல் இருக்கிறது.பொதுமக்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை, யாரும் உள்ளே செல்ல வேண்டாம் என்று கூறியது அந்த நோட்டீஸ். அதாவது டெக்னிக்கலி அந்தக் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட வேண்டியது..ஆனால்
அந்தக் கட்டிடம் மார்ட்டினுக்கு சொந்தமானது.
இதைப் பற்றி யாருமே வாய்திறக்காமல் இருந்த போது சத்யம் அரவிந்தாக்‌ஷன் உடனடியாக தனது ஒளிப்பதிவாளரை அனுப்பி படம்பிடித்து அதை ப்ரைம் டைமில் ஒளிபரப்பினார்.
இதுவரையில் அந்தக் கட்டிடத்தில் வியாபாரம் நடக்கிறது. மாநகராட்சி ,நீதிமன்றத்தில் கோப்புகள் தொலைந்து விட்டது என்று தெரிவித்துவிட்டது. இன்றளவும் அது பொதுமக்களுக்கு ஆபத்தான கட்டிடம் தான்.
இதையெல்லாம் பார்த்து ஆவன செய்யவேண்டியது யார்? ஆனாலும் இன்றளவிலும் இளையோரை திசை திருப்பி ஒன்றுக்கும் உதவாத பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...