Wednesday, June 14, 2017

திரௌபதியின் சுயம்வரம்...!

🌿 திட்டத்துய்மன், சுயம்வரத்திற்கான போட்டியின் விளக்கத்தை நான் உங்களுக்கு கூறுகிறேன். அரசர்களே! இங்கு வில்லும் அம்பும் வைக்கப்பட்டுள்ளது. துவாரத்துடன் கூடிய சக்கரம் மேலே சுழன்றுக் கொண்டிருக்கிறது. அதற்கும் மேலே மீன் வடிவத்தில் ஒரு இலக்கு இருக்கிறது. அதன் நிழல் கீழே உள்ள தண்ணீரில் உள்ளது. இந்த நிழலைப் பார்த்தவாறு, மேலே உள்ள மீன் இலக்கை சுழலும் சக்கரத்தின் துவாரம் வழியே அம்பை செலுத்தி வீழ்த்த வேண்டும். சரியாக யார் வீழ்த்துகிறார்களோ அவர்களுக்கே திரௌபதி மாலை
சூடுவாள் என்றான். அங்கு கூடியிருந்த மன்னர்கள் திரௌபதி தனக்கு தான் என்று கர்வம் கொண்டிருந்தனர்.
🌿 ஒவ்வொருவராக சென்று போட்டியில் கலந்து கொண்டனர். ஆனால் அவர்களால் சரியான இலக்கை குறி வைக்க முடியாமல் போனது. சில மன்னர்கள் தலைகுனிவுடன் திரும்பி வந்தனர். துரியோதனனும் சென்றான். அவனும் தோல்வியுடன் திரும்பி வந்தான். துரியோதனனின் தம்பிமார்களும் சென்றனர். அவர்களும் தோல்வியை அடைந்தனர். இவ்வாறு ஜராசந்தன், சிசுபாலன், சல்லியன் முதலானோர் போட்டியில் கலந்துக் கொண்டு தோல்வியுடன் திரும்பிச் சென்றனர். கடைசியில் கர்ணன் போட்டியில் கலந்து கொள்ள வந்தான். கர்ணன் வில்வித்தையில் சிறந்தவன் என்பதால் நிச்சயம் இவன் வெற்றி பெற்று விடுவான் என அர்ஜுனனுக்கும், கிருஷ்ணனுக்கும் தெரிந்தது. திரௌபதி, ஒருவேளை கர்ணன் இலக்கை சரியாக வைத்து வென்று விட்டால் அர்ஜூனனை தன்னால் திருமணம் செய்யாமல் போய்விடும் என நினைத்தாள்.
Image may contain: 4 people, sunglasses
🌿 கர்ணன வில்லை கையில் எடுக்கும் போது, என்னால் ஒரு சு த்திரனை திருமணம் செய்துக் கொள்ள முடியாது. இவர் அங்க நாட்டின் அரசனாக இருக்கலாம். ஆனால் இவர் பிறப்பால் ஒரு சு த்திரன். சு த்திரன் இப்போட்டியில் கலந்து கொள்ள முடியாது. வேறு எவரேனும் இருந்தால் கலந்துக் கொள்ளலாம் என்றாள். திரௌபதியின் பேச்சு கர்ணனுக்கு கோபத்தையும், மன சங்கடத்தையும் உண்டாக்கியது. மன்னர்கள் பலரும் கலந்துக் கொண்டு தோற்றுவிட்டனர். அதனால் திட்டத்துய்மன் போட்டியின் நிபந்தனையை தளர்த்தினான். இப்போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம் எனக் கூறினான். அப்பொழுது பிராமணர்கள் வீற்றிருக்கும் இருக்கையில் இருந்து அர்ஜூனன் எழுந்தான். கிருஷ்ணர், அர்ஜூனனை கண்டவுடன் இவர்கள் பாண்டவர்கள் என்பதை நன்கு உணர்ந்துக் கொண்டார்.
🌿 அர்ஜுனன் சபையின் நடுவில் இருக்கும் வில்லை எடுத்து, போட்டியின் விதிப்படி சக்கரத்தை பார்க்காமல் ஒரே அம்பில் மீனின் கண்களை துளைத்தார். இதைப் பார்த்த கர்ணனுக்கு இவன் அர்ஜூனனாக இருக்ககூடுமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. இதைப் பார்த்த திரௌபதி நிச்சயம் இவர் அர்ஜுனனாக இருக்கக்கூடும் என நினைத்து அர்ஜூனனனுக்கு மாலை சு டினாள். இதைப் பார்த்த மற்ற மன்னர்கள் ஒரு பிராமணனுக்கு நாட்டின் அரசி மனைவியாக அமைவதா? எனக் கூறி கடும் கோபம் கொண்டனர். துருபதன், தன் மகளை பிரமணாக இருக்கும் அர்ஜூனனுக்கு மணமுடித்து வைத்தான். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் தங்களுக்கு கிடைக்காத பெண் ஒரு பிராமணனக்கு கிடைத்ததை கண்டு மிகவும் கோபங்கொண்டனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...