நான் அறிந்த பார்வையில் இங்கு இதனைப் பதிவு செய்கிறேன்.
சாஸ்திரிய சங்கீதம் கலந்த இசையின் பின்னணியில் இருந்த தமிழ் திரை இசை
தன் தனி நடையில் அழகுற எழுந்து வரவைத்தவர்களில்
கே.வி. மகாதேவன் அவர்களும்..
எம்.எஸ். விசுவநாதன் அவர்களும் குறிப்பிடத்தக்க வகையில் ஆற்றிய பங்கு யாவரும் மறக்க முடியாதது...
மறுக்க முடியாதது.
கே.வி. மகாதேவன் அவர்களும்..
எம்.எஸ். விசுவநாதன் அவர்களும் குறிப்பிடத்தக்க வகையில் ஆற்றிய பங்கு யாவரும் மறக்க முடியாதது...
மறுக்க முடியாதது.
இப்படி காலம் வென்ற இசை தந்தவர்களுக்கு சோதனை மத்திய அரசின் ஒரு தலைப் பட்சமான போக்கு.
வடஇந்திய...இந்திக்கு தந்த சலுகைகள் தென்னிந்தியத் திரைப்படங்களுக்குப் புறக்கணிக்கப்பட்டன.
இந்தியில் நவீன இசை முறை கையாண்டு, வண்ணப் படங்களும் அதிகம் வந்து
1970 களில்
(..ஆராதனா....துவக்கம் என்று சொல்லலாம்.) தமிழ்த் திரையுலகு தடுமாற்றம் கண்டது.
1970 களில்
(..ஆராதனா....துவக்கம் என்று சொல்லலாம்.) தமிழ்த் திரையுலகு தடுமாற்றம் கண்டது.
வண்ணப் படங்கள் எடுக்க முடியவில்லை. இசைக்கு புதிய பரிமா ணம் பெறுவதிலும் குழப்பங்கள்.
இந்த நேரத்தில்தான் வாராது வந்த மாமுனிபோல் இளையராஜா அவர்கள் ..
அன்னக் கிளியில்,
அன்று கே.வி. மகாதேவன் அவர்கள் கொடுத்த மாற்றம் போலவே இந்தக் காலத்திற்கு இவர் கொடுத்தார்.
தொடர்ந்து எம்.ஜி. ஆர். அவர்கள் ஆட்சியில் சென்னைக்கு வண்ணப் படங்கள் பதியும் உரிமம் பெற்றதால்...
பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி உருவாகி... சக்கைபோடு ..!
வீறு நடை இன்றளவும் கொண்டு வந்துள்ளது.
இதை என் மனம் நன்கு உணர்கிறது.
கிராமியப் பாடல்களில் கவனம் வைத்த இசைஞானி அவர்கள்...
கிராமியப் பாடல்களில் கவனம் வைத்த இசைஞானி அவர்கள்...
பதினாறு வயதினிலே..
செந்தூரப் பூவே....பாட்டிலேயே நிமிர்ந்து விட்டார்.
கவிக் குயிலில் ,
பால முரளி கிருஷ்ணா அவர்களை ....
சின்னக் கண்ணன் அழைக்கிறான் ...பாட்டு பாடவைத்தது ஒன்றே போதும் ...
பால முரளி கிருஷ்ணா அவர்களை ....
சின்னக் கண்ணன் அழைக்கிறான் ...பாட்டு பாடவைத்தது ஒன்றே போதும் ...
இசைஞானி அங்கே உருவாகி விட்டார்.
அயல் மொழித்தாக்கம் புறந்தள்ளப் பட்டது.
நாடோடித் தென்றலில் புது விதமான சேர்க்கையாக ,
புதுமையான பாடல்களும் வந்தது.
சொந்தக் குரலில் மணியே மணிக்குயிலே.. ., ஒரு கணம் ஒரு யுகமாக.... .
அருமையாக ஒலிக்கிறது இன்னமும்.
அருமையாக ஒலிக்கிறது இன்னமும்.
மண்வாசனை,
கடலோரக் கவிதைகள்.....
இன்னும் இன்னும்...நீண்டு கொண்டே போகும்.
கடலோரக் கவிதைகள்.....
இன்னும் இன்னும்...நீண்டு கொண்டே போகும்.
இவருக்கும் அஞ்சலி படத்தில் ஒரு வித்தியாசமான புதுமைச் சேர்க்கையில் ...
அஞ்சலி...அஞ்சலி... பாடல்.
அனைத்தும் அற்புதம்.
அனைத்தும் அற்புதம்.
தளபதியில் ராக்கம்மா கையத் தட்டு...
என்று ஒரு பக்கம்...
என்று ஒரு பக்கம்...
இன்னொரு பக்கம் ..
யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே.. கண்ணனோடு.. அழகு..அருமை.
ஜானி படத்தில்
ஆர்ப்பாட்டமில்லாத இசை.....
காற்றில் எந்தன் கீதம்...!
ஆர்ப்பாட்டமில்லாத இசை.....
காற்றில் எந்தன் கீதம்...!
தாய் மூகாம்பிகையில் ,
ஜனனி ஜகம் நீ.....என்ற பாடல்.. மொழியறியாது ரசிக்கும் பக்திப்பாடலாயிற்று.
இது எனக்கு புதுமையே.
ஜனனி ஜகம் நீ.....என்ற பாடல்.. மொழியறியாது ரசிக்கும் பக்திப்பாடலாயிற்று.
இது எனக்கு புதுமையே.
ஆக, அந்த இரு சிகரங்களைத் தொடர்ந்து இவர் தமிழ்த் திரை கொண்டாடும் இசைஞானி அன்றோ !
மாணிக்க வாசகரின் திருவாசகத்தையும் புதுமை இசையில் புகுத்தியவரை .
கரம் கூப்பி நன்றியுணர்வுடன் வணங்குவோம்.
No comments:
Post a Comment