திகார் சிறையில் இருந்து, சென்னை திரும்பிய தினகரன், 'நான் தான், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர்; சசிகலாவை தவிர, வேறு யாராலும் என்னை நீக்க முடியாது' என அறி வித்துள்ளதால், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கடும் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
அடைந்துள்ளனர்.
அவரது தலைமையை விரும்பாத அமைச்சர் கள், கட்சியிலும், ஆட்சியிலும் தினகரனை அடியோடு ஓரங்கட்டவும், அடிமைத்தனத்தை ஒழிக்கவும் முடிவு செய்துள்ளனர். அதற்காக, முழுவீச்சில் களமிறங்க ஆர்வமாக உள்ளனர்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியி னர் விதித்த நிபந்தனை காரணமாக, தினக ரனை, கட்சியில் இருந்து விலக்கி வைப்பதாக, ஏப்., 18ல், அமைச்சர்கள் அறிவித்தனர். முதல்வர் பழனிசாமி ஒப்புதலுடன் வெளியான இந்த அறிவிப்பை, தினகரனும் ஏற்றுக் கொண் டார்.' என்னால் தான் பிரச்னைகள் ஏற்படுகிறது என்றால், நான் ஒதுங்கிக் கொள்ள தயாராக இருக்கிறேன். என்னை விலக்கி வைப்பதாக, அவர்கள் எப்போது கூறினரோ, அப்போதே நான் விலகி விட்டேன்' என்றும், தினகரன் கூறியிருந்தார்.தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி, ஏப்., 25ல், சிறைக்கு செல்லும் முன், தினகரன், இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
அவர் சிறையில் அடைக்கப்பட்ட பின், அவரது பேச்சே எழாத வகையில், அமைச்சர்களின் செயல்பாடுகள் இருந்தன. அதனால், ஆட்சி பணிகளும், கட்சி பணிகளும் சுமுகமாக சென்றன. இடையில் சில, எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி கொடி துாக்கியபோது கூட, அவர்களை உடனடியாக அழைத்துப் பேசி அமைதிப் படுத்தினர். அவர்களால் எழுந்த சலசலப்பையும் அடக்கினர்.அதன்பின், வெளிப்படையாக, எந்த அதிருப்தி குரலும் கேட்காத வகையில், ஆட்சி நிர்வாகம் அமைதியாக நடந்தது. அமைச்சர்களும் ,தங்களது துறை சார்ந்த பணிக ளில், இதுவரை இல்லாத அளவுக்கு அக்கறை செலுத்தினர். அதன்பலனாக, துறை ரீதியான அறிவிப்புகள் நிறைய வெளியாகின.

பள்ளிக் கல்வித் துறையில், அதிரடி மாற்றங்கள் செய்யப் பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என முத்தரப்பிலும் வரவேற்புபெற்ற மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன.
நீண்ட காலமாக, இழுபறியில் கிடந்த திட்டங்களுக் கும், உடனடி ஒப்புதல் கிடைத்தன. உதாரண மாக, சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர் மட்ட சாலை திட்டம், புத்துயிர் பெற்றது. முதல் முறை யாக, சேலம் மாவட்டம், மேட்டூர் அணை துார் வாரும் பணி துவங்கி, முழுவீச்சில் நடக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, டில்லியில் பிரதமரை சந்தி த்து, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு, அதிக நிதி ஒதுக்கும்படி, முதல்வரால் கேட்க முடிந்தது. ஜெ., மறைவுக்கு பின், கட்சியிலும், ஆட்சியிலும் காணப்பட்ட எந்த பரபரபப்பும், சலசலப்பும் இன்றி, கடந்த ஒன்றரை மாதமாக, தமிழக ஆட்சி நிர்வாகம் அமைதியாக இருந்தது. அதற்கு பின்னடைவை ஏற் படுத்தும் விதமாக, தினகரன் வருகையும், அவரது அறிவிப்பும் இருப்பதாக, மூத்த அமைச்சர்கள் கருதுகின்றனர்.
தினகரன் சிறைக்கு செல்லும் முன், மின் துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் தான், தினகரனை ஒதுக்கிவைப்பது என முடிவெடுக்கப்பட்டது. முதல்வர் அறிவுரைப் படி, அந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மூத்த அமைச்சர்கள், இப்போது கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அந்த அமைச்சர்கள் தரப்பில் கூறப் படுவதாவது:தினகரனுக்கு ஜாமின் கிடைத்த செய்தி வெளியானதும், அதன்பின் நடக்கக் கூடிய சூழல்கள் குறித்து, ஏற்கனவே மூத்த அமைச்சர்கள் ரகசியமாக விவாதித்துள்ளனர். அப்போதே, தினகரன் தலை யீட்டை எந்த விதத்திலும் அனுமதிக்க கூடாது என, முடிவு எடுக்கப்பட்டு விட்டது.
அதன் வெளிப்பாடு தான், அமைச்சர் ஜெயகுமாரின் பேட்டி. 'தினகரன் ஜாமினில் விடுதலையாகி வந்தாலும், அவரை அமைச்சர்கள் சந்திக்க மாட்டோம்' என, ஜெய குமார் தெரிவித்திருந் தார். அந்த பேட்டிக்கு பின்னணியில், முதல்வர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் உள்ளனர். ஏற்கனவே அறிவித்த படி, தினகரனை அடி யோடு ஒதுக்கி வைத்து விடுவது என்பதில், முதல்வர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உறுதியாக உள்ளனர்.
அதன் வெளிப்பாடாக தான், 'தினகரன், கட்சி யில் நீடிப்பது குறித்து, முதல்வரும், முக்கிய நிர்வாகிகளும் முடிவு செய்வர்' என, அமைச்சர் கள் செங்கோட்டையன், வேலுமணி ஆகியோர், ஒரே கருத்தை கூறியிருக்கின்றனர். தினக ரனை தொடர அனுமதித்தால், சசிகலா குடும் பத்தின் ஆதிக்கம் மீண்டும் தலைதுாக்கும்; அந்த அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்பதில், கொங்கு பகுதியை சேர்ந்த மந்திரிகள் முடிவோடு இருக்கின்றனர்.இவ்வாறு அமைச்சர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
எம்.எல்.ஏ.,க்கள் யார் யார்?
சென்னை, அடையாறில் உள்ள தினகரன் வீட்டின் முன், நேற்று ஆதரவாளர்கள் திரண்டு நின்று, அவருக்கு வரவேற்பு அளித்தனர். மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்தனர். எம்.எல்.ஏ.,க்கள் ஜக்கையன், வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் தினகரனை
சந்தித்து பேசினர். 'அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு, அவர் இன்று வருவார்; ஓரிரு நாளில், பெங்களூரு சென்று, சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க உள்ளார்' என்றும், அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment