மலேசிய விமான நிலையத்தில் திரு.வைகோ அவர்களை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பிய மலேசிய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது .
மலேசிய தூதரக அதிகாரிகளை அழைத்து இந்திய அரசு இதை கண்டிக்கவேண்டும்.
உலக பயங்கரவாத இயக்கமான விடுதலை புலிகள் இயக்கம் ஆயுதங்களை வாங்க உலகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தினார்கள். ஆட்களை கடத்தி பணம் பறித்து வந்தார் கள். பல்வேறு சட்ட விரோத செயல்களிலெல்லாம் ஈடுபட்டு வந்தார்கள். இதனால் உலகின் பல நாடுகளில் விடுதலை புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மலேசிய அரசும் விடுதலை புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு தடைவிதித்துள்ளது.
திரு.வைகோ அவர்கள் உலக பயங்கரவாத இயக்கமான விடுதலை புலிகளின் தமிழக ஏஜெண்ட்டாக செயல்பட்டு வந்தார். அவர்களின் ஊதுகுழலாக செயல்பட்டு வந்தார் என்பது உலகறிந்த உண்மை. இன்றைக்கு விடுதலை புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்ட நிலையில் வைகோ அவர்களை அதே கண்ணோட்டத்தோடு மலேசிய அரசு பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
திரு.வைகோ அவர்களின் அரசியல் நிலைபாடுகளில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் ஒரு பண்பாடுள்ள அரசியல் தலைவர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
தமிழக அரசியல் வரலாற்றில் அவர் ஒரு தவிர்க்க முடியாத தலைவர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ.க.கூட்டணி யில் போட்டியிட்டாலும் கூட மோடியின் அரசியல் போக்கை விமர்சித்து முதலில் கூட்டணி யை விட்டு விலகி வெளியேவந்தவர்திரு.வைகோஅவர்கள்தான்( இன்றுவரை கூட பா.ம.க வும் தேமுதிக வும் தமது பாஜகவின் ஆதரவு நிலை குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை).

தமிழக நலனுக்காக குரல் கொடுப்பதில் முன்னணி யில் நிற்பவர். தமிழனின் கலை கலாச்சார சிறப்புகளை உலகிற்கு எடுத்து சொல்லும் சிறந்த சொற்பொழிவாளர். விடுதலை புலிகளின் ஆதரவாளர் என்கிற எண்ணத்தை மட்டும் விலக்கி வைத்துவிட்டு தமிழின உணர்வோடு பார்த்தால் ... ஓரு தமிழன் வைகோ அவமானப் படுத்தப்பட்டது ஏற்றுக்கொள்ளவே முடியாதது.
No comments:
Post a Comment