Tuesday, June 6, 2017

செவ்வாய் தோஷத்துக்கு உள்ள பல விதி விலக்குகள்- சோதிடம் சொல்லும் உண்மை.

செவ்வாய் தோஷத்துக்கு உள்ள பல விதி விலக்குகள்- சோதிடம் சொல்லும் உண்மை

செவ்வாய் தோஷத்துக்கு உள்ள பல விதி விலக்குகள்
ஒருவரது ஜாதகத்தில் தோஷங்கள் எத்த‍னை இருந்தாலும் அவற்றைவிட மிகவும் சோகமான
தோஷம் எதுவென்றால் அது செவ்வாய் தோஷம் தான். இருமனங்கள் இணையும் திருமண வாழ்க்கையில் செவ்வாய் பகவானுக்கு முக்கிய பங்குண்டு. திருமணத்துக்கு வரன் பார்க்கும்போது, பிள்ளைக்கோ அல்ல து பெண்ணுக்கோ செவ்வாய்தோஷம் இருக்கிறதா என்றுதான் முதலில் கேட்கிறார்கள். அந்தளவுக்கு செவ்வாய் தோஷம் பாடாய்ப்படுத்துகிறது.
ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியோருக் கும், செவ்வாய் இருக்கும் இடத்துக்கும் உள்ள தொடர்பைக் கொண்டுதான் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜாதகத்தில் எந்த அளவுக்கு வலிமையாக இருக்கிறது என்பதைக் கணிக்கமுடியும்.
லக்னம், ராசியில் சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இருக்கும் இடத்து க்கு, 2ம் இடம், 4ம் இடம், 7ம் இடம், 8ம் இடம், 12ம் இடம் ஆகிய இடங்க ளில் ஒன்றில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் தோஷம் ஆகும். ஆனால், மேற்கண்ட இடங்களில் செவ்வாய் இருந்து, குரு, சனி, சூரியன் ஆகியோ ரின் சேர்க்கை பெற்றிருந்தாலும், பார்வை பெற்றிருந்தாலும் தோஷம் இல்லை.
செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகர ராசிகளில் இருந்தாலும் தோஷம் இல்லை. கடகம், சிம்மம் லக்னத்துக்குச் செவ்வாய் தோஷம் இல்லை.
செவ்வாய் இருக்கும் இடம் 2-ம் வீடாக இருந்து, அந்த வீடு மிதுனம் அல்ல து கன்னியாக இருந்தாலும் தோஷம் இல்லை.
செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்திருந்தாலும் தோஷம் இல்லை. செவ்வாய் இருக்கும் இடத்தின் ராசிஅதிபதி கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும் தோஷம் இல்லை. இப்படி செவ்வாய் தோஷத்துக்கு பல விதிவிலக்குகள் உள்ளன.
ஆக, துல்லியமாகக் கணித்து செவ்வாய் தோஷம் இருக்கிறது என்றால், நம்பிக்கையோடு மிகஎளிய பரிகாரங்களைச் செய்வதன்மூலம் தோஷ நிவர்த்தி பெறலாம். செவ்வாய் தோஷம் என்பது திருமணத் தடையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், மேலும் பல இடையூறுகளையும் ஏற்படு த்தும். எனவே, செவ்வாய் பகவானை செவ்வாய்தோறும் செவ்வாய் ஹோரையில் வழிபடுவதும், செவ்வாய்க்குரிய கடவுளான முருகப்பெரு மானை ஒன்பது நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் செவ்வாய் தோஷத்தினா ல் ஏற்படக்கூடிய அசுப பலன்களின் தாக்கத்தைப் பெரிதும் குறைக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...