Tuesday, June 6, 2017

ஒருநாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்றால் இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.

ஒரு நாட்டின் ரூபாய் மதிப்பு என்பது தங்கம் கையிருப்பை வைத்து கணக்கிடப்படுகிறது
தங்கத்தை வைத்து நாணய மதிப்பை எவ்வாறு கணக்கிடுகிறார்கள் என்ற சந்தேகம் எழுந்தால் அதனை பற்றிய முழுமையான விவரங்களை பெற இந்த லிங்கில் சென்று பாருங்கள் 👇👇👇
நம்மிடம் மொத்தம் 12, 500 டன் தங்கம் தான் கையிருப்பு உள்ளது
ஆனால் கேராளாவில் உள்ள மலப்புரம் கோல்டு அடகு கடையில் 19,500 தங்கம் டன் அடகு வைக்கப்பட்டுள்ளது என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது
அதற்காக தான் தங்க பத்திரம் திட்டம் அறிமுகபடுத்தப்பட்டது இருந்தும் நம்ம அறிவாளிங்க நகைய தூக்கிட்டு அடகு கடைக்கு தான் போகிறார்கள்
ஏன் இப்பொழுது தங்கத்தை இழுத்தேன் என்றால் தங்கத்தை கொடுத்தே நாம் அமெரிக்க டாலரை வாங்க முடியும்
ஏன் நமக்கு அமெரிக்கா டாலர் என்ற தேவை என்கிற சந்தேகம் எழுந்தால் ?
காரணம் இதுதான் டாலரை வைத்தே நாம் பெட்ரோலை இறக்குமதி செய்ய முடியும்.
இப்பொழுது அடுத்த சந்தேகமா ?
பெட்ரோல் அரேபிய நாடுகளிலிருந்து கிடைக்கிறது அவர்களின் நாணய மதிப்பிலிருந்து தானே விற்கப்பட வேண்டும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் அவர்கள் ஏன் டாலரில் விற்க வேண்டும் என்ற சந்தேகம் எழலாம் .
காரணம் யோம் கிப்பூர் என்கிற ஒரு விடுமுறை தினத்தில் நடந்த போர் அது என்னவென்றால் இஸ்ரேல் என்ற ஒரு நாடு உள்ளது. யூதர்களுக்கானது .
அவர்களுடைய ஒரு பண்டிகை தினம் தான் யோம்கிப்பூர் அதாவது இறைவனுக்கு நன்றி செலுத்துவது என்பது அதன் பொருள் அன்றைய தினத்தில் அவர்கள் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள் Including ராணுவ வீரர்கள் கூட ஓய்வில் தான் இருப்பார்கள் அந்த தினத்தில் அவர்களின் பரம எதிரிகளான அரேபியர்களும், இஸ்ரேலை சுற்றியுள்ள முஸ்லீம் நாடுகளும் இஸ்ரேலின் மீது படையெடுத்தனர்.
முதலில் இஸ்ரோல் ராணுவத்திற்கு பலத்த அடி . பின்பு இஸ்ரேல் அடித்த அடியில் அரபு நாடுகள் அலறி அடித்துகொண்டு அமெரிக்காவிடம் ஓடின .
அமெரிக்கா ஒரு ஒப்பந்தம் போட்டது இனிமேல் நீங்கள் என் நாட்டின் பணமதிப்பில்தான் பெட்ரோலை விற்க வேண்டும் இதற்கு சம்மதித்தால் நான் உங்களுக்கு போரில் உதவுகிறேன் என்றது. ஆதாலால் தான் பெட்ரோல் டாலரில் விற்கப்படுகிறது இதில் இன்னொரு காமெடி என்வென்றால் இஸ்ரேலும், அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள்
இஸ்ரேலியர்களும், அரேபியர்களுக்கும் என்ன பிரச்சினை என்று கேட்டுவிடாதீர்கள்??? பங்காளி சண்டைதான் பிறகு ஆதாம் ஏவாளிலிருந்து கதையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் ...😂😂😂
சரி விஷயத்திற்கு வருவோம்
நம் நாட்டில் இப்பொழுது பெட்ரோலின் தேவை அதிகமாகிவிட்டது
நம்நாட்டின் மிக முக்கியமான இறக்குமதி பெட்ரோல் - டீசல் தான் அதற்கு நாம் நாட்டில் உள்ள தங்கத்தை கொடுத்து அமெரிக்காவிடம் டாலரை வாங்கி பிறகு அதை அரபு நாடுகளிடம் கொடுத்துதான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய முடியும்
இப்படி நாம் இருக்கும் தங்கத்தை கொடுத்து விட்டால் நம் நாட்டின் பணமதிப்பு குறைந்துவிடும்
ஒருநாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்றால் இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்
நாம் அதிகளவு கச்சா எண்ணெயை தான் இறக்குமதி செய்கிறோம் அதற்கு மாற்றாக தான் ஹைட்ரோ கார்பன் திட்டம்
ஏற்றுமதியை அதிகரிக்க தான் பாரதபிரதமர் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்தார்
ராமர் பிள்ளையை மீண்டும் அழைத்திருக்கிறார்கள் யார் இந்த ராமர்பிள்ளை என்கிறீர்களா? மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்தற்காக காங்கிரஸ் அரசால் சிறையில் அடைக்கப்பட்டவர் . தற்பொழுது மோடியின் ஆசியால் மீண்டும் தனது ஆராய்ச்சியை தொடங்கி உள்ளார் .
அரேபிய தேசங்களில் எண்ணெய் வளம் குறைய ஆரம்பித்துள்ளது .எண்ணெய் வளம் படுக்கும் போது உலகநாடுகள் அனைத்திற்கும் பலத்த பொருளாதார அடி ஒன்று விழும் அதை எதிர்கொள்ளதான் ஹைட்ரோகார்பன் திட்டம், மூலிகை பெட்ரோல் திட்டங்கள் எல்லாம்
ஹைட்ரோ கார்பன் திட்டம் இந்தியாவின் பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு தற்பொழுதும் செயல்பாட்டில் உள்ளது குறிப்பாக நர்மதா, பிரம்மபுத்திரா நதிக்கறைகளில் வயல்வெளிக்கு நடுவில் தான் உள்ளது இதுவரை எந்த பாதிப்பும் இல்லை
இது இந்தியாவில் மட்டும் அல்ல உலகின் பல்வேறு நாடுகளிலும் செயல்பாட்டில் உள்ளது உதாரணமாக இஸ்ரேலை கூறலாம் குறிப்பாக ஏன் இஸ்ரோலை கூறுகிறேன் என்று நீங்கள் கேட்கலாம் காரணம் உள்ளது
எந்தவிதமான பூச்சிகொல்லி மருந்துகளும் இல்லாமல் முழுக்க முழுக்க இயற்கை முறையில் விவசாயம் செய்யும் ஒரே நாடு இஸ்ரேல் தான் அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்
நாம் எலியை கொல்ல எலி மருந்து வைப்போம் ஆனால் அவர்கள் வீட்டுக்கு ஒரு ஆந்தை வளர்ப்பார்கள் ஏன் தெரியுமா? மருந்தை உட்கொண்ட எலி வெளியில் சென்று பயிரை கடித்தால் அதிலிருக்கும் வேதிப்பொருள் அந்த பயிரில் சேர்ந்துவிடுமாம் அதனை தடுக்கவே இந்த ஆந்தை வளர்ப்பு அப்படிபட்ட ஒரு நாட்டிலேயே ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்பாட்டில் உள்ளது .
ஆனால், இங்கே அரசிற்கு எதிரான மனபோக்கு கொண்ட ஒரு சிலரால் தூண்டிவிடப்பட்டது தான் இந்த ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...