Monday, June 12, 2017

பாகுபலி ஒரு கற்பனைக் கதை..

ஆனால் அந்த கற்பனையையே மிஞ்சிவிடும் சாகசங்களை செய்த ஒருவன் நிசமாகவே இருந்தான்.
ஆயிரம் வருடங்களுக்கு முன் ரத்தமும் சதையுமாக நடமாடினான்..
போர் அவனது வாழ்க்கை முறை.
வாள் அவனது முதல் மனைவி,
வில் அவனுக்கு இரண்டாவது மனைவி.
தன் வாழ்நாளின் இருபது வருடங்களை கடற்போரிலேயே கழித்தவன்.
எதிர்த்து நின்றவர்களை தூசி கூட மிச்சம் இல்லாமல் தூர்வாரித் தள்ளியவன்.
Image may contain: sky, cloud, outdoor and nature
அறுபதாயிரம் யானைகள் கொண்ட யானைப் படைகளையும்,ஒரு லட்சம் காலட்படை வீரர்களையும் கொண்ட ஒரு யுத்த சேனையை வங்கக் கடலை கிழித்து கடந்து கொண்டு போய் மறு கரையிலே நிறுத்திய அடுத்த நொடி,மறு பேச்சில்லாமல் வீழ்ந்த நாடுகள் ஏராளம்.
மலேசியா,தாய்லாந்து,சிங்கப்பூர்,இந்தோனேசியா,ஜாவா,சுமத்திரா,இலங்கை என கீழ்த்திசை நாடுகள் முழுவதும் வென்று அங்கே புலிக்கொடியைப் பறக்க விட்டவன்.
இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் பேரரசன்..
தமிழ்ப் பேரரசன்..
“ராஜராஜ சோழன்”
"ராஜேந்திரன்"
ராஜேந்திர சோழன்.
கற்பனைக் கதைகளை கண்டிப்பாக ரசிப்போம்.
ஆனால் வரலாற்றை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம்.
இந்த கோடை விடுமுறையில் முடிந்தவர்கள் ராஜராஜ சோழனின் தஞ்சை பெரிய கோவிலையும், ராஜேந்திரனின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள்.சோழர்களின் சாகசங்களைச் சொல்லுங்கள்......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...