Monday, July 17, 2017

#மலச்சிக்கல்_வறட்டு_இருமல்_பிரச்சினையா.

இந்த காலத்தில் மலச்சிக்கல் இல்லாத மனிதரை பார்ப்பது அரிது. இதற்கு காரணம் இப்பொழுது உள்ள உணவுப் பழக்கமாகும்.
ஒரு கற்பனையாக வைத்துக் கொள்வோம் காலையில் எழுந்ததும் மலம் கழிப்பது மிகவும் சிரமாக வலியோடு இருந்தால் என்ன நடக்கும்? காலை வேலைகள் எதுவும் ஓடாது அல்லவா? நமது உடலின் கழிவுகள் வெளியே சென்றால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு அர்த்தம்.
ஆனால் இந்த மலச்சிக்கல் பிரச்சினையால் குடலின் நலம், மூலம் மற்றும் கிருமிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நமது தவறான உணவுப் பழக்கம், ஆன்டிபயாடிக்ஸ், ஹார்மோன் சமநிலையின்மை போன்றவைகள் மலச்சிக்கலை ஏற்படுத்துகின்றன. அதிகமான ஸ்டார்ச் மற்றும் குறைந்த நார்ச்சத்து உணவை உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
வறட்டு இருமல் நமது சுவாசப் பாதையில் ஏற்படும் தொற்றால் ஏற்படுகிறது. இதுவும் நமது உடல் நலத்தை மிகவும் பாதிக்கும். காலநிலை மாற்றம், தூசி அழற்சி, செல்லப் பிராணிகளால் அழற்சி போன்றவைகள் வறட்டு இருமலை ஏற்படுத்துகின்றன.
மேலும் வைரல் காய்ச்சல், சுவாசப் பாதை தொற்று, மூச்சுக் குழாய் அழற்சி, புகைப்பழக்கம், காச நோய் போன்றவற்றின் அறிகுறியாக வறட்டு இருமல் உள்ளன.
எனவே உங்களை படாய்படுத்தும் இந்த இரண்டு பிரச்சினைக்காக ஓரே ஒரு ஆயுர்வேத தீர்வு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
1 டேபிள் ஸ்பூன் சூடான நெய் :
1 டம்ளர் சுடு தண்ணீர்
செய்முறை :
1 டேபிள் ஸ்பூன் சூடான நெய்யை சாப்பிட்டு உடனே 1 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
இதை தினமும் காலையில் சாப்பாட்டுக்கு முன் சாப்பிட்டால் மலச்சிக்கல் காணாமல் போகும்.
இதே முறையை இரவில் படுப்பதற்கு முன் செய்தால் வறட்டு இருமல் குணமாகும். உங்கள் மலச்சிக்கல் மற்றும் வறட்டு இருமல் மாயமாய் போக இந்த எளிய முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
சேர்க்க வேண்டியவை :
இதை நீங்கள் தினமும் எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் மற்றும் வறட்டு இருமல் குணமாகும். மேலும் இதனுடன் சேர்ந்து நல்ல உணவுப் பழக்கம், அதிகமான நீர் பருகுதல், உடற்பயிற்சி இவற்றை மேற்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சினை குறைந்து விடும்.
தவிர்க்க வேண்டியவை:
வறட்டு இருமல் உள்ளவர்கள் இந்த முறையை மேற்கொள்வது மட்டுமில்லாமல் குளிர் பானங்கள், எண்ணெய் உணவுகள், சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
மலச்சிக்கல் :
நெய் ஒரு இயற்கையான மலமிளக்கி ஆகும். இந்த நெய் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாகும். இது குடலின் சீரண சக்தியை அதிகமாக்கி நச்சுக்களை வெளியேற்றி விடும். மேலும் மலத்தை நெகிழ்வாக்கி இலகுவாக வெளியேற உதவுகிறது.
இருமல் :
சூடான நெய் ஒரு அழற்சி எதிர்ப்பு பொருளாக செயல்பட்டு வறட்டு இருமலை போக்குகிறது. மேலும் தொண்டையில் ஏற்படும் எரிச்சலையும் குணப்படுத்துகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...