👉 மேஷத்தில் சனி நிற்க பிறந்தவர் மூர்க்கனாவார். தொழில் நிமித்தம் அதிகம் சிரமம் அடைய நேரிடும்.
👉 ரிஷபத்தில் சனி நிற்க பிறந்தவர் சகோதர நன்மை இல்லாதவராகவும், தொழில், விவசாயம் போன்றவற்றில் தனம் தேடுபவராகவும் இருப்பார்.
👉 மிதுனத்தில் சனி நிற்க பிறந்தவன் தொழில்நுட்ப அறிவு படைத்தவர். அரசுக்கு ஆலோசனை வழங்குபவராகவும் இருப்பார்.
👉 கடகத்தில் சனி நிற்க பிறந்தவர் ரோகமான தாயாரையுடைவர். தண்ணீரால் வியாதி கண்டம் உடையவர்.
👉 சிம்மத்தில் சனி நிற்க பிறந்தவர் பிதுர் துவேஷி, ரோக களத்திரம் உடையவர்.
👉 கன்னியில் சனி நிற்க பிறந்தவர் தொழிலில் தனமுடையவர். கடின உழைப்பாளி.
👉 துலாத்தில் சனி நிற்க பிறந்தவர், நேர்மையானவர், மூர்க்கன், தனக்காக (அ) தன்னைச் சார்ந்தவர்க்காக நியாய ஸ்தலம் செல்வார்.
👉 விருச்சிகத்தில் சனி நிற்க பிறந்தவர் முன் கோபியாக இருப்பார். கடின உழைப்பாளி, பணிவான மனைவி அமைவாள்.
👉 தனுசில் சனி நிற்க பிறந்தவர் சகோதர அன்பை பெற முடியாதவராக காணப்படுவார். தொழில் நுட்ப அறிவு மிகுந்தவராகவும் இருப்பார்.
👉 மகரத்தில் சனி நிற்க பிறந்தவர் பெருந்தன்மை மிகுந்தவர். நீதி நெறி தவறாதவர்.
👉 கும்பத்தில் சனி நிற்க பிறந்தவர் சதா பிரயாண சுகம் உள்ளவர். சகோதர நேசம் இல்லாதவர்.
👉 மீனத்தில் சனி நிற்க பிறந்தவர் தொழில், தனம் உடையவர். தொழில் நுட்ப அறிவுடையவராக திகழ்வார்.
No comments:
Post a Comment