இந்தியாவின் முன்னால் பிரதமர் ஜவர்ஹலால் நேருவும், மவுண்ட் பேட்டன் மனைவியும் உடல்ரீதியான தொடர்பு வைத்திருந்திருக்க வாய்ப்பில்லை என்பது மவுண்ட் பேட்டனின் மகள் பமீலா ஹீக்ஸ் எழுதிய “Daughter of Empire: Life as a Mountbatten” என்ற புத்தகத்தின் மூலம் தெரியவந்துள்ளது. மவுண்ட் பேட்டனின் மனைவி எட்வினாவிற்கும், ஜவஹர்லால் நேருவிற்கும் இடையில் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
ஒருவரோடு ஒருவர் உணர்வுகளால் ஈர்க்கப்பட்டு கடிதங்களால் காதலைப் பகிர்ந்து கொண்டனர். பொது இடங்களில் இருவரும் நெருக்கமாக காணப்பட்டதால், இந்த காதல் விவகாரம் வெளிப்படையாகவே இருந்தது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர் எட்வினா தன் கணவர், குழந்தையுடன் இங்கிலாந்துக்கு பிரிந்து சென்றுவிட்டார். பிறகு நேருவும் எட்வினாவும் கடிதங்கள் மூலம் காதலைத் தொடர்ந்துள்ளனர்.
எந்நேரமும் அவர்களைச் சுற்றிப் பணியாளர்கள், போலீஸ் என இருந்ததாலும் பொதுமக்கள் நடுவில் வாழ்ந்ததாலும் அவர்களுக்கு உடல்ரீதியான உறவு வைத்துக்கொள்வதற்கு நேரம் இல்லை.
அவர்களின் கடிதங்களைப் படித்த பின்னர்தான் அவர்களுக்கிடையில் இருந்த ஆழமான காதலை புரிந்துகொள்ள முடிந்தது. என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நேருவிற்கு மரகதக்கல் பதித்த மோதிரத்தை நேரிடையாக நேருவிடம் கொடுக்காமல், இந்திராவிடம் எட்வினா கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment