லோக்சபாவில் மொத்தமுள்ள 543 இடங்களில் பா.ஜ., 279 எம்.பி.,க்களுடன் தனிப் பெரும் கட்சியாகவும்,
கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 340 எம்.பி.,க்களுடன் அசைக்க முடியாத பலத்துடன் உள்ளது.
அதே நேரத்தில் 12 நியமன உறுப்பினர்கள் உட்பட 245 எம்.பி.,க்களை உடைய ராஜ்யசபாவில் பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு போதிய பலம் இல்லை.
ராஜ்யசபாவில் பெரும்பான்மைக்கு 123 பேரின் ஆதரவு தேவை. பா.ஜ.,வுக்கு, 57 எம்.பி.,க்களே உள்ளனர்.
ராஜ்ய சபாவில் 10 எம்.பி.,க்களை வைத்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் இணைந்ததன் மூலம் தே.ஜ., கூட்டணியின் எம்.பி.,க்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் விரைவில் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் பா.ஜ., -எம்.பி.,க்கள் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்.
இதைத் தவிர அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் போன்ற மாநிலக் கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவுஅளித்து வருகின்றன.
இந்தக் கட்சிகளின் 26 எம்.பி.,க்கள் மற்றும் நான்கு நியமன எம்.பி.,க்களின் ஆதரவும் பா.ஜ.,வுக்கு உள்ளது.
இவற்றையும் சேர்த்தால் ராஜ்யசபாவில் தே.ஜ., கூட்டணியின் பலம், 121 ஆக உயர்கிறது.
அதாவது பெரும்பான்மையை பா.ஜ., நெருங்கிவிட்டது.
பா.ஜ., ஆளும் உ.பி.,யில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஒன்பது ராஜ்யசபா எம்.பி.,க் களின் பதவிகள் காலியாகின்றன.
அதில் எட்டு இடங்களில் வெற்றி பெறுவதற் கான வாய்ப்பு பா.ஜ.,வுக்கு கிடைத்து உள்ளது.
அப்போது கூட்டணி கட்சிகள் மற்றும் ஆதரவு கட்சிகள் உதவியுடன் பா.ஜ., தலைமையி லான தே.ஜ., கூட்டணிக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் கிடைக்கும்.
*** ராஜ்ய சபா என்று ஒன்று இந்தியாவுக்கு தேவை இல்லை. யாரெல்லாம் தேர்தலில் தோற்கிறார்களோ அவர்கள் எல்லாம் பின் வாசல் வழியாக பதவி பெறுகிறார்கள்.
இது என்ன நியாயம். மக்கள் புறக்கணித்த ஒருவர் எப்படி பார்லிமென்டில் பதவி பெறலாம்.
மணிசங்கர் ஐயரும் இப்படித்தான்.
சட்ட திருத்தம் செய்து இந்த ராஜ்ய சபாவை மூட வேண்டும். இல்லையெனில் எல்லா நற்பணிகளை மாறி மாறி இந்த கெட்டவர்கள் கையில் தான்.
கனி மொழி, ராஜா, மணிசங்கர் ஐயர், அருண் ஜெட்லி, யெச்சூரி, கம்யூனிஸ்ட் ராஜா என்று பெரிய லிஸ்டை சொல்லலாம்.
தனது அடுதத கட்ட நடவடிக்கையாக மோடி, ராஜ்ய சபாவுக்கு ‘குட்பை’ சொல்ல வேண்டும்...!!!
No comments:
Post a Comment