பிரிட்டிஷ் அரசு சி.வி.இராமனுக்கு 1929-ஆம் ஆண்டு சர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தச் சமயத்தில் இங்கிலாந்தில் இருந்த புகழ்பெற்ற விஞ்ஞானிகள், விருதுபெற்ற விஞ்ஞானி இராமனை சிறப்பிக்கும் விதத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்கள். விருந்தின் போது மது தாராளமாக வழங்கப்பட்டது.
விஞ்ஞானி இராமனிடம் மது அருந்தும் பழக்கம் இல்லை. அதனால் அவர் மது எதையும் தொட்டுக்கூடப்பார்க்க வில்லை. சில விஞ்ஞானிகள் இராமனிடம் வந்து தலைமை விருந்தினரான தாங்கள் மதுவை அருந்தாவிட்டால் எப்படி? என்று குறைப்பட்டுக் கொண்டார்கள்.
அதற்கு இராமன் எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்று பதில் அளித்தார்.
இதுவரை பழக்கமில்லாமல் இருக்கலாம். இன்றே அப்பழக்கத்தை ஆரம்பியுங்களேன். மது குடித்தால் உடலின் என்ன விளைவு ஏற்படும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று விஞ்ஞானிகள் இராமனை வற்புறுத்தினார்கள்.
அதற்கு இராமன் ஒளிச் சிதைவு விளைவுகளைப் பற்றித்தான் நீங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டுமே தவிர, மது குடிப்பதினால் ஏற்படும் விளைவுகளைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டாமே என்றார்.
இவரின் சிறப்புகள் :
No comments:
Post a Comment