Monday, July 24, 2017

GST யிலிருந்து எப்படி டிமிக்கி கொடுக்கலாம்???

மோடிக்கும்
அருண் ஜேட்லிக்கும்
GST யிலிருந்து
எப்படி டிமிக்கி
கொடுக்கலாம்???
ஜி எஸ் டி வரியை தவிர்க்க வழிமுறைகள்
பெருசா ஒன்னுமில்லைங்க,,நம்ம தாத்தா காலத்து வழிமுறைதான்.
1. வெளியில் செல்லும்போது குடிதண்ணீர் பாட்டிலில் எடுத்து செல்லவும்.
2. பயணத்தின் போது புளி சாதம் , லெமன் சாதம் , வசதி இருந்தால் வெஜ் பிரியாணி வீட்டில் செய்து கட்டி எடுத்து செல்லவும் ( டப்பால கட்டுங்க கவர்ல கட்டினா ஜி எஸ் டி வரும் )
3. அண்ணாச்சி கடைக்கே போங்க , வயர்கூடை இல்லேன்னா மஞ்ச பை எடுத்திட்டு பொய் லூஸ்ல அரிசியோ, பருப்போ, இன்னபிற மளிகை ஜாமான் வாங்குங்க .
4. வார இறுதி நாட்களில் வீட்லயே குடும்பத்தோட ஏதவது ஸ்பெசல் உணவு தயார் செய்து சாப்பிடுங்க.
5. திரைப்படத்தை multiplex அல்லாத திரையரங்குகளில் பாருங்க
6. விடுமுறை நாட்களில் மால் , ஷாப்பிங் னு போகாம பாட்டி தாத்தா ஊருக்கோ, சொந்த ஊருக்கோ போலாம் .
7. காலைல நடைப்பயிற்சி சென்று விட்டு பெருமைக்காக ஹோட்டலில் காபி குடிக்காமல் வீட்டுக்கு வந்து கருப்பட்டி காபி குடித்து பழகுங்க .
8 . சேவை வரியை தவிர்க்க அடுத்தவரின் சேவையை தவிர்த்து சொந்தமாக நம்வேலையை நாமே செய்ய முயற்சி பண்ணலாம் .
இப்படி செய்தால்
உடல் ஆரோக்கியமாகும் .
மிகப்பெரும் பணம் மிச்சமாகும் .
சொந்தம் பெருகும்
மனைவி கணவன் பாசம் , அம்மா அப்பா பிள்ளைகள் பாசம் பெருகும் .
தேவையற்ற பந்தா குறையும்
நட்பு வட்டங்கள் உண்மையாகும்.
வாழ்வும் இனிமையாக இருக்கும்.
எல்லாம் நன்மைக்கே என்ற
கருத்து உண்மையாகும்.
உண்மையான பழைய இந்தியா மீண்டும் பிறக்கும் .
ஜெய்ஹிந்த்,,, வந்தே மாதரம்,,,

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...