Wednesday, July 26, 2017

எம்.ஜி.ஆரால் முடியும்!!



விவசாயி ஷூட்டிங்!!
தேவர் சொல்கிறார் எம்.ஜி.ஆரிடம்----
கடவுளே!!-- நாளை நீங்கள் கூழ் குடிப்பது போல் காட்சியமைப்பு!!--பதில் தருகிறார் எம்.ஜி.ஆர்.
ஆண்டவனே!!-- நாளை கூழ் என் வீட்டிலிருந்தே எடுத்து வருகிறேன்!1--தேவரும் ஒப்புக் கொள்கிறார்!!
மறு நாள்---
ஒன்று--இரண்டு--மூன்று--இப்படி ஆள் உயர கேரியர்கள் 16 --எம்.ஜி.ஆர்.காரிலிருந்து இறங்குகின்றன??
படத்தில் எம்.ஜி.ஆருக்கு தந்தையாக நடிக்கும் மேஜர்--எம்.ஜி.ஆரிடம் கேட்கிறார்!!
இவ்வளவு கேரியர் அடுக்குகளில் கூழா??
பதில் சொல்கிறார் எம்.ஜி.ஆர்---ஆம்--!!!
குறிப்பிட்ட காட்சி வரும் நேரத்தில் கேரியர்கள் பிரிக்கப்படுகின்றன??
படப்பிடிப்பில் உள்ளவர்கள் அத்தனை பேர்கள் இதயங்களிலும் மகிழ்ச்சி விரிக்கப்படுகிறது!!
எம்.ஜி.ஆரின் உயர்ந்த குணம் அங்கே---
உரிக்கப்பட்டு--சிரிக்கப்படுகிறது??---
ஆம்!!--எம்.ஜி.ஆரின் முதல் நாளைய-சொற் கண்டு--
கூழை எதிர்பார்த்த மேஜர் முன்னால்--கற்கண்டு சாதம்??
லைட்-பாய்--முதற்கொண்டு--அத்தனை பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு--கடைசியாக--
எம்.ஜி.ஆர்.கூழ் குடிப்பது போல் அதை உண்கிறார்??
அடுத்து--நான் ஏன் பிறந்தேன் ஷூட்டிங்!!
அதில்--எம்.ஜி.ஆரும்--மேஜரும்--உணவருந்தும் காட்சி!!
பதி நாலு வகை பதார்த்தங்கள் பரிமாறப் படுகின்றன??
மேஜர் கேட்கிறார்-- எம்.ஜி.ஆரிடம்----
அன்று கற்கண்டு சாதம்!! இன்றோ கண்ணுக்கெட்டிய வரை பதார்த்தங்கள்??
அன்றாடம் வீட்டில் இவ்வளவு வகையான பதார்த்தங்களை சாப்பிடுவீர்களா??--
பதார்த்தங்கள் பற்றிய கேள்விக்கு பல அர்த்தங்களை உள்ளடக்கிய யதார்த்தமான பதில் எம்.ஜி.ஆரிடமிருந்து??
என்னால் வகை வகையாகவும் சாப்பிட முடியும்!!--வகையே இல்லாமல் வெறும் கூழைக் குடிக்கவும் தெரியும்!! அப்படி வளர்த்திருக்கிறார்கள் என்னை--என் அன்னை!! அவ்வளவு ஏன்? உணவே இல்லாமல் நான்கு நாட்கள் வெறும் ஈரத்துணியை வயிற்றில் கட்டிக் கொண்டும் வாழ்ந்திருக்கிறேன்??--சுருக்கமாகச் சொன்னால்---எனக்கு----
கூழை குடிக்கத் தெரியும்?/
கூழைக் கும்பிடு தான் தெரியாது??உடலுக்கு சக்தியைக் கொடுப்பது தான் உணவு என்றிருக்க வேண்டுமே தவிர--அதுவே ---
நாவுக்கேற்ற கனவு என்றானால் அதுவே நோவுக்கேற்ற காரணமாகிவிடும்???-----
அமெரிக்காவில் --எம்.ஜி.ஆர--சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டிருந்த நேரம்!!--அவரை சந்தித்து விட்டு வந்த சிவாஜியிடம் கேட்கிறார் மேஜர்--
எப்படியிருக்கிறார் சின்னவர்?? பேசினீர்களா அவருடன்??
சிவாஜி சிக்கனமாக உரைக்கிறார்!!--ஆம்-நெடு நேரம் பேசினோம்??
என்னப் பேசினீர்கள்??--ஆவலுடன் கூடிய கேள்விக்கு சிவாஜி சொன்ன பதில் நமக்கு--கேவலை வரவழைக்கும்??
நானும் அண்ணனும்--ஒருவருக்கு ஒருவர் பதினைந்து நிமிடங்கள் எங்களை மறந்து பார்த்துக் கொண்டிருந்தோம்!! இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் அருவியாக வ்ழிந்தபடி அருமையாகப் பேசிக் கொண்டிருந்தன???
அர்த்தம் புரிந்து கொண்ட மேஜர் --குளமது ஒற்றிய கண்களோடு -- வளமது வற்றிய குரலில் கேட்கிறார்??
இவ்வளவு பாசம் கொண்டுள்ள உங்கள் இருவருக்கும் இடையில் மோசம் கொண்ட அவதூறுகள் ஏன் பேசப்படுகின்றன??
இதுவரை நாங்கள் இருவருமே அது பற்றிக் கவலைப் பட்டதில்லை?? காரணம்--
நான் நாடகத்துறைக்கு வந்த நாளிலிருந்து எனக்கு அன்னமிட்டகையின்--அருமைத் தாய்--சத்யா என்னும் அன்னை இட்ட கை தான் அன்றாடம் எனக்கு உணவு ஈந்தது???
இளைய தலை முறை எம்.ஜி.ஆர் தொண்டர்களே--
உணவு பற்றிய விஷயத்தை உள்வாங்கிக் கொள்ள உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!!
பிஸ்ஸா வேண்டும் என்று நினைக்கும் நேரம்--பைஸா இல்லா பஞ்சையை நினைத்துக் கொள்ளுங்கள்!!
உழைப்புக்கு உணவே தவிர-- உண்பதே உழைப்பு இல்லை??---என் அடுத்த நிகழ்வில் நீங்கள் அறிய வேண்டியது---
பகை என்னும் புகை உங்கள் நெஞ்சுக்குள் புகுந்து விட்டால்---அங்கே
தகை என்னும் அருள் தங்குவதற்கு வழியில்லாமல் குகை அதன் இருள் --- கொள்ளும்--பின்--கொல்லும்!!!!!
என்ன தோழமைகளே உண்மைதானே????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...