இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் 15-8-1947. அன்றுதான் பாரதத் திருநாடு, அடிமைப் பட்டிருந்த வெள்ளையனிடமிருந்து, அன்னல் காந்தியடிகளால் மீட்கப்பட்ட பொன்னான நாள். அன்று அதிகாலை காந்தியார் திருப்படத்தினை அலங்கரித்துச் சப்பரத்தில் அமர்த்தி, பள்ளி மாணவர்களால் சுமந்து, வீதி உலா, விவேகானந்தர் வித்யாவனம் மாணவர்கள் அணிவகுத்து வர திருமடத்திலிருந்து புறப்பட்டு, திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்ரர் திருக்கோவில் இராஜகோபுர முகப்பில் வந்தடைந்தது. ஊர்மக்கள் புடைசூழ மாணவர்களை வரவேற்றார்கள். இவ் ஊர்வலத்திற்கு தலைமை தாங்கிய அருளாளர் நமது ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்த மகராஜ் அவர்கள். கோபுரத்தின் முன்பு மாணவ, மாணவிகளை இந்திய வரைபடம் வடிவத்தில் நிற்க வைத்து, மையத்தில் ஆசிரியப் பெருமக்களும் (தலைமை ஆசிரியர் திரு. ஆர். இராமகிருஷ்ணன், நாங்களெல்லாம் அன்போடு அழைக்கும் திரு. கே.ஆர். எஸ். அவர்களும் நிற்க கொடிகம்பத்தில் இந்திய தேசியக் கொடியினை நமது சுவாமிஜி அவர்கள் ஏற்றி வைத்தார்கள். அந்த தெய்வீகத் திருக்காட்சி நிகழ்வில், அடியேனும் 10 வயது மாணவனாக பங்குப்பெற்றேன் என்று நினக்கின்றபோது உண்மையிலேயே பெருமையாக இருக்கின்றது. இதில் அப்படம் இணைக்கப்பட்டுள்ளது. படத்தில் வட்ட வடிவம் போட்டு சுவாமிஜி அவர்களை காட்டியுள்ளேன். மாணவர்கள் வரிசையில் முதல் வரிசையில் காந்தி படத்திற்கு கீழ் சிறுவனாக கைகட்டி நிற்பது அடியேன்.
நன்றி.
நன்றி.
No comments:
Post a Comment