“நாக்லா ஃபடேலா கிராமம் ஒன்றும் தொலைவில் இல்லை. இந்த நாட்டின் தலைநகரிலிருந்து மூன்று மணி நேரத்தில் சென்றடையலாம். ஆனால் அந்த கிராமத்திற்கு மின்சாரம் சென்றடைவதற்கு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகி இருக்கின்றன.” ஆகஸ்ட் 15, 2016, திங்கட்கிழமையன்று, அதாவது சென்ற வருடம் சுதந்திர தினத்தன்று மோடி டெல்லி செங்கோட்டையில் நின்று மார் தட்டி உணர்ச்சிகரமாகப் பேசிய விஷயங்களில் ஒன்று இது.
2015ல், முந்தைய சுதந்திர தினத்தன்று அதே இடத்தில் நின்று, இந்த தேசத்தில் இன்னும் 18000 கிராமங்களுக்கு மேல் மின்சார வசதி இல்லை. அவைகளுக்கு மின்சார வசதி ஏற்பாடு செய்து தருவதுதான் தனது முதற்பணி என கூவி முழக்கமிட்டு இருந்தார்.
இந்த ஒரு வருடத்தில் தான் சொன்னதை செய்து காட்டி விட்டதாகவும், இந்த நாட்டில் இதுவரை இருந்த அரசுகள், ஆட்சிகள் எல்லாம் அக்கறை காட்டாத மிக அடிப்படையான வசதியை, மோடியாகிய தானே ஏற்படுத்தி தந்திருப்பதாகவும் அவரது தொனியில் பெருமிதம் பொங்கி வழிந்தது.
நாக்லா ஃபடேலா கிராம மக்கள் டெல்லியில் நடந்த சுதந்திர தின விழாவை முதன்முறையாக டிவியில் பார்க்கும் படம் ஒன்றை PMO (Prime Miniter Office) தனது டுவிட்டரில் வெளியிடவும் செய்தது.
மோடியின் இந்தப் பேச்சு தவறானது, பொய்யானது என்பதை அடுத்த சில மணி நேரங்களில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கண்டுபிடித்தது. நாக்லா ஃபடேலா கிராமத்தில் மின்சார வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதையும், PMO டுவிட்டரில் வெளியிட்ட படம் தங்களது கிராமத்தின் படமல்ல என்பதையும் அங்குள்ள மக்கள் உறுதி செய்தனர்.
அம்பலப்பட்டவுடன் PMO வெளியிட்ட அந்த டுவிட்டரை கமுக்கமாக டெலிட் செய்து கொண்டது. ஆனால் அதற்குள் அந்த படம் capture செய்யப்பட்டு, இணையத்தில் மோடியின் அழுகுணியாட்டம் கப்பலேறி இருந்தது.
No comments:
Post a Comment