நீங்க வாங்குகின்ற பொருள், உணவு எதுவாக இருந்தாலும் உங்களுக்கு கொடுக்கின்ற பில்களில் கண்டிப்பாக ஜி.எஸ்.டி. நம்பர் இருக்க வேண்டும்.
பில் வாங்கிப்பார்க்கும் போது அப்படி இல்லையென்றால் அட்லீஸ்ட் கேஷ்கவுன்ட்டர் பக்கத்தில் ஜி.எஸ்.டி. எண் வழங்கியதற்கான சர்டிஃபிகேட் ஒன்றை பிரேம் செய்து மாட்டியிருக்க வேண்டும்.
இரண்டுமே இல்லாம பில்களல ஜி.எஸ்.டி. க்கான வரியுடன் சேர்த்து கட்டணம் வசூலி்த்தால் அதற்கான வரியை நுகர்வோர்கள் செலுத்தவே கூடாது. நுகர்வோர்களான நாம் வரி செலுத்தும்போது வர்த்தகர்கள் ஜி.எஸ்.டி. பதிவு எண்ணை கண்டிப்பாக கண்பிக்க வேண்டும்.
இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு சின்ன செயின் லிங்க் உணவகத்தில் ஒரு உணவினை வாங்கிவிட்டு பில் வாங்கிப்பார்த்த போது ஜி.எஸ்.டி. 12% சதவீதம் என போடப்பட்டு இருந்தது. அந்த சேல்ஸ்மேனிடம் இந்த பில்லில் ஜி.எஸ்.டி நம்பர் இல்லையே எப்படி நீங்கள் இந்த வரியை வசூலிக்கின்றீர்கள் என்றேன்.
உடனே அவர் பதில் சொல்லத் தெரியாமல் அவருடைய முதலாளிக்கு ஃபோன் போட்டு என் கையில் பேசச் சொல்லி கொடுத்தார்.அதே கேள்வியை அவரிடமும் கேட்டேன்.
சார் ஜி.எஸ்.டி. க்கு அப்ளை பண்ணியிருக்கேன் சார். இன்னும் வரலே சார் என்றார். அப்படிஎன்றால் நீங்கள் இப்போது வசூலித்த தொகையை எப்படி செலுத்துவீர்கள் என்றேன்.
நம்பரே இல்லாமல் வரி செலுத்த முடியாது, நீங்கள் இப்படி வசூலிப்பது சட்டப்படி குற்றம் என்றேன். சரி சார் நீங்கள் வரி இல்லாமல் வாங்கிட்டு போங்க என்றார்.
ஆகவே ஜி.எஸ்.டி பதிவு எண் இல்லாமல் ஜி.எஸ்.டி வரி வசூலிப்பாது சட்டப்படி குற்றம் ஜி.எஸ்.டி பதிவு எண் இல்லாமல் வசூலித்த வரியை எந்த அரசுக்கும் செலுத்த முடியாது.
ஜி.எஸ்.டி பதிவு எண் இல்லாமல் வசூலித்த வரி அனைத்தும் வியாபரிகளுக்கே செல்லும். ஆகவே நாம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
குறிப்பு: எனக்கு வந்ததைப் பகிர்ந்துள்ளேன்.
No comments:
Post a Comment