பணத் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில்,வெளிர் மஞ்சள் நிறத்தில்,200 ரூபாய் நோட்டுகள், இன்று முதல் புழக்கத்துக்கு வருகின்றன.கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், 2016 நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி, 'புழக்கத்தில் இருந்த, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, புதிதாக, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இருப்பினும் பணத் தட்டுப்பாடு குறைய வில்லை; சில்லரை கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. இதைஅடுத்து, 200 ரூபாய் நோட்டு களை அறிமுகம் செய்வதற்கான அரசாணை, சமீபத்தில் வெளியிடப்பட்டது. பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய, 200 ரூபாய் நோட்டு, வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ளது.இந்த நோட்டு கள், இன்று முதல் புழக்கத்துக்கு வரும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கிகளின் கிளைகளிலும், குறிப்பிட்ட வங்கிகளிலும், இன்று முதல், இந்த ரூபாய் நோட்டு கள்புழக்கத்துக்கு வரும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.அடுத்ததாக, ஒளிரும் நீல வண்ணத்திலான, 50 ரூபாய் நோட்டுகளை வெளியிடவும், ரிசர்வ் வங்கி திட்டமிட்டு உள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்படும், 200 ரூபாய் நோட்டில், பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
* மஹாத்மா காந்தி வரிசையில், புதிய நோட்டு வெளியிடப்படுகிறது. இதில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலின் கையெழுத்து இடம் பெறுகிறது
*முன்பக்கத்தின் நடுவில், மஹாத்மா காந்தியின் படம் உள்ளது. ரிசர்வ் வங்கி, பாரத், 200, இந்தியா என்றபெயர்கள் தொடர்ச்சியாக இடம் பெற்றுள்ளன
* நோட்டை மேலும் கீழுமாக அசைக்கும் போது, நோட்டில் உள்ள இழையின் நிறம், பச்சையில் இருந்து நீலமாக மாறும்.
* ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்துடன் கூடிய உறுதிமொழி வார்த்தைகள், ரிசர்வ் வங்கியின் சின்னம் ஆகியவை, முன்பக்கத்தில், மகாத்மா காந்தி படத்துக்கு அருகே இடம் பெற்றுள்ளன.• முன்பக்கத்தில் உள்ள ரூபாய் சின்னம் மற்றும் நோட்டின் மதிப்பான, 200 ஆகியவை யும், மேலும் கீழும் அசைக்கும் போது, பச்சை யில் இருந்து நீல நிறத்துக்கு மாறும்
* அசோக துாண் சின்னம், முன்பக்கத்தின் வலது புறம் இடம் பெற்றுள்ளது
• நோட்டின் வரிசை எண், முன்பக்கத்தின் மேல் இடது புறம் மற்றும் கீழ் வலது புறம் உள்ளது. இந்த எண்களின் அளவு, ஏறுவரிசையில் அமைந்துள்ளது
* நோட்டின் பின்புறத்தில், சாஞ்சி ஸ்துாபி சின்னம் இடம் பெற்றுள்ளது
* 'ஸ்வச் பாரத்' சின்னம் இடம் பெற்றுள்ளது.
இருப்பினும் பணத் தட்டுப்பாடு குறைய வில்லை; சில்லரை கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. இதைஅடுத்து, 200 ரூபாய் நோட்டு களை அறிமுகம் செய்வதற்கான அரசாணை, சமீபத்தில் வெளியிடப்பட்டது. பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய, 200 ரூபாய் நோட்டு, வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ளது.இந்த நோட்டு கள், இன்று முதல் புழக்கத்துக்கு வரும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கிகளின் கிளைகளிலும், குறிப்பிட்ட வங்கிகளிலும், இன்று முதல், இந்த ரூபாய் நோட்டு கள்புழக்கத்துக்கு வரும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.அடுத்ததாக, ஒளிரும் நீல வண்ணத்திலான, 50 ரூபாய் நோட்டுகளை வெளியிடவும், ரிசர்வ் வங்கி திட்டமிட்டு உள்ளது.
புதிய நோட்டு எப்படி இருக்கும்?
புதிதாக அறிமுகம் செய்யப்படும், 200 ரூபாய் நோட்டில், பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
* மஹாத்மா காந்தி வரிசையில், புதிய நோட்டு வெளியிடப்படுகிறது. இதில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலின் கையெழுத்து இடம் பெறுகிறது
*முன்பக்கத்தின் நடுவில், மஹாத்மா காந்தியின் படம் உள்ளது. ரிசர்வ் வங்கி, பாரத், 200, இந்தியா என்றபெயர்கள் தொடர்ச்சியாக இடம் பெற்றுள்ளன
* நோட்டை மேலும் கீழுமாக அசைக்கும் போது, நோட்டில் உள்ள இழையின் நிறம், பச்சையில் இருந்து நீலமாக மாறும்.
* ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்துடன் கூடிய உறுதிமொழி வார்த்தைகள், ரிசர்வ் வங்கியின் சின்னம் ஆகியவை, முன்பக்கத்தில், மகாத்மா காந்தி படத்துக்கு அருகே இடம் பெற்றுள்ளன.• முன்பக்கத்தில் உள்ள ரூபாய் சின்னம் மற்றும் நோட்டின் மதிப்பான, 200 ஆகியவை யும், மேலும் கீழும் அசைக்கும் போது, பச்சை யில் இருந்து நீல நிறத்துக்கு மாறும்
• நோட்டின் வரிசை எண், முன்பக்கத்தின் மேல் இடது புறம் மற்றும் கீழ் வலது புறம் உள்ளது. இந்த எண்களின் அளவு, ஏறுவரிசையில் அமைந்துள்ளது
* நோட்டின் பின்புறத்தில், சாஞ்சி ஸ்துாபி சின்னம் இடம் பெற்றுள்ளது
* 'ஸ்வச் பாரத்' சின்னம் இடம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment