Sunday, August 27, 2017

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு 2600 கோடி அபராதம்: புற்றுநோய் அபாயம்!

ஜான்சன் & ஜான்சன் குழந்தைகளுக்கான ஒரு சிறப்பு பவுடராக உலகெங்கிலும் திகழ்ந்து வருகிறது. ஜான்சன் & ஜான்சன் பவுடர் பயன்படுத்தாத வீடுகளே இருக்காது என்ற அளவிற்கு குழந்தைகளுக்கான சிறப்பு பவுடராக காணப்படுகிறது.
ஆனால், கடந்த சில வருடங்களாக இந்த பவுடரில் கலக்கப்படும் சில கெமிக்கல்ஸ் புற்றுநோய் ஏற்பட காரணியாக இருக்கிறது என வழக்குகள் அதிகம் பதிவாகி வருகின்றன.
சமீபத்தில், இப்படி ஒரு வழக்கில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திடம் இருந்து அமெரிக்க பெண் ஒருவர் ரூபாய் 2600 கோடி இழப்பீடு தொகையாக பெற்றுள்ளார்...

ஈவா எக்கேவர்ரியா!
ஈவா எக்கேவர்ரியா, கலிபோர்னியாவில் வசித்து வரும் பெண்மணி. இவர் பல வருடங்களாக ஜான்சன் & ஜான்சன் பவுடர் பயன்படுத்தி வந்தார்.
இவருக்கு கர்பப்பை புற்றுநோய் இருப்பது ஒருநாள் அறியவந்தது. மருத்துவ பரிசோதனைகள் செய்த பிறகு, பல ஆண்டுகளாக அவர் பயன்படுத்தி வந்த ஜான்சன் & ஜான்சன் பவுடர் தான் அதற்கு காரணமாக இருந்தது என அறியவந்தது.
லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றம்!
லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றம்!
இதை தொடர்ந்து, ஈவா எக்கேவர்ரியா லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தான் கடந்த சில ஆண்டுகளாக கர்பப்பை புற்றுநோயால் அவதிப்பட்டு மரணத்தின் விளிம்பில் வாழ்ந்து வருகிறேன். இதற்கு காரணம் சிறு வயதில் இருந்து பயன்படுத்தி வந்த ஜான்சன் & ஜான்சன் பவுடர் தான் என தெரிவித்திருந்தார்.
தீர்ப்பு!

தீர்ப்பு!
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு 2600 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
இந்த தொகை போக, அந்த பெண்மணியின் மருத்துவ செலவையும் அந்நிறுவனமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் மற்றும் இதர சில பொருட்களும் புற்றுநோய் உண்டாக காரணமாக இருக்கிறது என அமெரிக்க நீதிமன்றங்களில் இதுவரை ஏறத்தாழ 1500 வழக்குகள் பதிவாகியுள்ளன.
கலிபோர்னியா!

கலிபோர்னியா!
இதற்கு முன் கடந்த ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஜான்சன் & ஜான்சன் நி
றுவனத்திடம் இருந்து ரூபாய் 467 கோடி இழப்பீடு தொகை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நான்கு முறை இந்நிறுவனம் இது போன்று அபாராதம் செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...