காதுகள் மனித உடலின் முக்கிய உறுப்பாக திகழ்கிறது. காதில் ஏற்படும் சில முக்கிய அறிகுறிகளை வைத்தே ஒருவரது உடல் நலத்தை கணிக்க முடியும்.
காது மடல் சிவந்திருப்பது
காது மடலானது சிவப்பாக காணப்பட்டால் அது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். இது எதனால் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால் இதய நோய் ஏற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு காதுகள் சிவந்தே இருக்கும்.
காது மடிப்புகள்
பிறக்கும் போதே சில குழந்தைகளின் காது மடிப்புகள் விசித்திரமாக இருப்பதோடு ஓட்டை சிறியதாக இருக்கும். இவர்களுக்கு பிற்காலத்தில் லோ சுகர் பிரச்சனை ஏற்படும்.
சிறிய காதுகள்
டவுன் மற்றும் டர்னர் சிண்ட்ரோம் இருந்தால் காதுகள் சிறிய அளவில் இருக்கும். இந்த பிரச்சனை இருப்பவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் தாமதம் ஏற்படும் அல்லது தடை ஏற்படும்.
வெளிப்புற காதே இல்லாமல் இருந்தால்
குழந்தையாக பிறக்கும் போதே சிலருக்கு வெளிப்புற காதுகள் இருக்காது. தாய் கர்ப்பமாக இருக்கையில் சாப்பிடும் மாத்திரைகளால் இது ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது. இதனால் பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது.
காது ஓரத்தில் அதிக தசைப்பகுதி
காதுகள் வளரும் அதே பருவத்தில் குழந்தைகளுக்கு சிறுநீரகமும் வளர்கிறது. இது சிறுநீரக செயல்பாட்டோடு தொடர்புடையது.
அதனால் குழந்தைகளுக்கு காதின் ஓரங்களில் அதிக தசைப்பகுதி வளர்ந்தால் மருத்துவரிடம் சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment