Sunday, August 20, 2017

இப்போது புரிகிறதா?

*ஜெயலலிதா சுதாகரனை வளர்ப்பு மசனாக அறிவித்ததில் சசிகலா செய்த சதி என்ன?வெளிவராத உண்மைகள்* 
1995ம் ஆண்டு இறுதியில் சசிகலா தன் அக்கா மகனும் டி.டி.வி தினகரனின் தம்பியுமான வி.என்.சுதாகரனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து நடிகர் சிவாஜி கணேசன் பேத்தியை பெண் பார்த்தார்.
அப்போது ஓரு நாடகத்தை அரங்கேற்றினார். தந்சை மாவட்டத்தில் எங்கள் குடும்பத்தை பற்றி நன்கு தெரிந்ததால் சிவாஜி குடும்பத்தார் 
பெண் தர தயங்குகிறார்கள். அக்கா நீங்கள் சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவித்தால் பெண் 
தருவார்கள் என்று கண்ணீர் விட்டார். அந்த நீலிக்கண்ணீரில் அன்று அம்மா
ஏமாந்தார்.
போயஸ் கார்டன் வீடு முதல் அம்மாவின் அத்தனை சொத்துக்களையும் அபகரிக்க சசிகலா போட்ட திட்டத்தின் முதல் படி அப்போதுதான் அரங்கேற்றம் ஆனது.
*முன்கதை சுருக்கம்*
1975-ம் ஆண்டு வாக்கில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அம்மையார் உயில் ஓன்றை தங்களுடைய ஆடிட்டர் சுப்பாராவ் மூலமாக
எழுதி பதிவு செய்தார்.
அந்த உயிலின் படி போயஸ் தோட்ட வீடு, ஹைதராபாத்
திராட்சை தோட்டம் உட்பட சில சொத்துக்கள் ஜெயலலிதா
பெயரிலும், தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள சந்தியா இல்லம் மற்றும் சென்னையை அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள சில
ஏக்கர் நிலங்கள் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெ.ஜெயக்குமாருக்கும் எழுதி வைக்கப்பட்டது.
அதே நேரம் உயிலில் ஓரு கண்டிஷனை சந்தியா விதித்தார்.
ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் அவர்களுக்கு உண்டான சொத்துக்களை ஆண்டு அனுபவிக்கத்தான் முடியும். அடமானம் வைக்கவோ ..விற்கவோ முடியாது.
அவர்கள் காலத்திற்கு பிறகு அந்த சொத்துக்கள் அவர்களது வாரிசுகளுக்கே சேரும்.
வாரிசுகள் இல்லை என்றால் இருவருக்கும் பின்னால் அரசுக்கு சேரும் என்று உயிலில் எழுதப்பட்டுள்ளது.
இப்போது புரிகிறதா? எவ்வளவு கிரிமினல் புத்தி யோடு சசிகலா ஜெயலலிதாவை ஏமாற்றி பிற்காலத்தில் சொத்தை அபகரிக்க தனக்கு குழந்தை குட்டி இல்லாததால் தன் அக்கா மகன் சுதாகரனை ஜெயலலிதாவின் வாரிசு ஆக்கினார் என்று .
பின்னாளில் வழக்குகளில் சிக்கி தவிக்கும் போது சோ மூலமாக இந்த சதியை உணர்ந்ததால் தான்
சுதாகரனை தன் வாரிசு இல்லை என்று ஜெயலலிதா அறிவித்தார்.
தற்போது, போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அரசு அறிவித்ததும் சசி - தினகரன் கொள்ளை கும்பல் அலறுவது இதனால் தான்.
தனக்கு துணைக்கு யாரும் இல்லை என்பதால் உதவிக்காக சசிகலாவை நம்பி தன்னோடு சேர்த்துக் கொண்ட, நல்ல மற்றும் குழந்தை மனம் படைத்த ஜெயலலிதா அதற்கான விலையை கொடுத்துவிட்டது தான் பரிதாபம்.
*சிறுவயது முதல் அம்மாவையும் அவரது குடும்பத்தைப் பற்றி நன்கு அறிந்து அவர்களோடு பழகிய...சத்யாலயா*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...