Monday, August 14, 2017

சசி - தினகரனுக்கு ஏன் இந்த சோதனை?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு, தமிழக அரசியலை புரட்டிப்போட்டாலும் அவரது ஆத்மா அ.தி.மு.க., கட்சியை படாத பாடு படுத்தி வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை.
ஜெயலலிதாவின் திடீர் மரணம் அக்கட்சித் தொண்டர்களை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழக மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
நம் தலைவி எப்படியும் உயிருடன் திரும்ப வந்துவிடுவார் என நினைத்திருந்த தொண்டர்களுக்கு அவரது திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து தொண்டர்கள் இன்னும் மீளவில்லை.
ஜெயலலிதா மறைந்தவுடன்
சசிகலா அன் கோவுக்கு
திடீர் பதவி ஆசை ஏற்பட்டது.
போயஸ் கார்டனே மன்னார்குடி மாபியாக்கள் வசம் சென்றது. இப்போதுதான் சசிகலாவுக்கு பிரச்னையே ஆரம்பமானது.
பதவி - பணம் இரண்டும் இருந்தால் யாருக்குத்தான் ஆசை வராது என சொல்லலாம். உண்மைதான்.
ஆனால், இப்படிப்பட்ட நேரத்தில் விவேகத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும். அப்படி சசிகலா நடந்து கொள்ளவில்லை.
பணம், பதவி இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம்
என சசிகலா நினைத்தார். ஆனால், இந்த இரண்டு மட்டும் இருந்தால் போதாது. ஜெயலலிதா மாதிரி ஆளுமைத் திறமை வேண்டும் என சசிகலாவுக்கு தெரியாமல் போனதே அவர் வீழ்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துவிட்டது.
வேலைக்காரியாக இருந்தவர்
முதல்வரா என பலர் கேட்கின்றனர்.
அப்படிப் பார்த்தால் தமிழகத்தில்
இதுவரை இருந்த முதல்வர்களின் ஆரம்ப வாழ்க்கையை வெளியே கொண்டு வந்தால் வேலைக்காரியே பராவாயில்லை என தோன்றும்.
அதை விடடு விடலாம்.
சசிகலாவுக்கு முதலில் ஆப்பு வைத்தது அவரது கணவர் நடராஜன்.
ஜெயலலிதா இறந்த நிலையில், அவர் தந்திரம் செய்ததாக நினைத்து காங்கிரஸ் பக்கம் அதிமுகவை கொண்டு செல்ல முயன்றார். இதை காங்கிரஸ் வரவேற்றது என்றே சொல்ல வேண்டும்.
2ஜி ஊழல்தான் படுதோல்விக்கு காரணம் என காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் சோனியாவிடம் கூற, அவரும் திமுகவை கழற்றிவிடும் முடிவில் இருந்தார்.
இதனால் தான் ஜெயலலிதவை அடக்கம் செய்யும் வரை ராகுல், திருநாவுக்கரசர் ஆகியோர் இருந்தனர். நடராஜனின் இந்த செயலை சசிகலா ஒரு ராஜதந்திரமாகவே நினைத்தார்.
ஆனால், இங்குதான் மன்னார்குடி மாபியாக்கள் மீது மத்திய அரசின் பார்வை திரும்பியது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா,பிரதமர் மோடியிடம் நல்ல நண்பராகவே இருந்தார். இப்படிப்பட்ட நிலையில், சசிகலா அன் கோ காங்கிரஸ் பக்கம் செல்கிறதே,ராஜ்யசபாவில் 37 எம்.பி.க்கள் வைத்துள்ள அதிமுக நம்மை கழற்றிவிட முயற்சிக்கிறதே என நினைத்த மத்திய அரசு ஓ.பி.எஸ்.,சை வைத்துக் கொண்டு தங்களது ஆட்டத்தை துவக்கியது.
ஜெயலலிதாவுக்கு என்னதான் நடந்தது என மக்களிடையே ஒருவித குழப்பம் இன்று வரை இருக்கிறது. அவரது மறைவில் மர்மம் இருப்பதாகவே மக்கள் இன்றும் நினைக்கின்றனர்.
இதனால்தான் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மறைவின் மர்மம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
தவிர,அப்பலோவில் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை என கூறியது, அப்பலோ டாக்டர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியது உள்ளிட்ட பல ஜெயலலிதா மறைவு குறித்து மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
தங்களது புரட்சி தலைவி மறைவுக்கு
சசிகலா காரணம் என தொண்டர்கள் உறுதியாக நம்பிய நிலையில், சசிகலா சில அதிரடி நடவடிக்கைகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
முதலில் போயஸ் கார்டனை காலி செய்து விட்டு அந்த வீட்டை நினைவிடமாக மாற்றி இருக்க வேண்டும்.
தவிர,உடனடியாக ஜெயலலிதா சமாதியை பிரம்மாண்டமாக கட்டியிருக்க வேண்டும். (அந்த நேரத்தில் சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு வரவில்லை).
இதை செய்திருந்தால் கூட
தொண்டர்களுக்கு சசிகலா
மீது ஒருவித அனுதாபம் ஏற்பட்டிருக்கும்.
சரி, இதைத்தான் செய்யவில்லை என்றால், உயிர் தோழி ஒருவர் இறந்து ஒருமாதம் கூட ஆகாத நிலையில், முதல்வராக வேண்டும் என்ற ஆசை வந்தது, மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
யாருக்குமே அவர்களது நண்பனோ, தோழியோ இறந்து விட்டால் குறைந்தபட்சம் அதிலிருந்து வெளியே வர 3 முதல் 6 மாதகாலம் ஆகிவிடும்.
அதிலும், முதல்வர் ஜெயலலிதாவின் தோழி என சொல்லப்படும் சசிகலாவுக்கு வாழ்க்கையே ஒருவித வெற்றிடம் போல இருந்திருக்க வேண்டும்.
தோழியே போன பிறகு பதவியாவது, மண்ணாங்கட்டியாவது என இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எவ்வித சலனமும் இல்லாமல் முதல்வராக வரவேண்டும் என கனவுடன் ஜெயலலிதா போலவே மேக்கப் செய்து, அவரைப் போலவே நடை, உடை பாவனை செய்தது மக்களை மேலும் எரிச்சலடையச் செய்துள்ளது.
இந்த நிலையில்தான் மத்திய அரசு ஒரு முடிவுக்கு வந்தது. சசிகலாவை இப்படியே விட்டு விட்டால் நிலைமை வேறுமாதிரி போய்விடும் என்பதை உணர்ந்த
மத்திய அரசு சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பை அதிரடியாக அறிவிக்க வைத்தது.
ஜெயலலிதா,சசிகலா உட்பட நால்வர் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் நான்கு வருட சிறை தண்டனை வழங்கியது.
"நான் போனால் என்ன? தினகரன் இருக்கிறான். அவன் கட்சியை நடத்துவான்" என சசிகலா நினைத்தார். தினகரன் மீது ஏற்கனவே இருந்த அந்நியசெலாவணி உள்ளிட்ட வழக்குகளை மத்திய அரசு தூசி தட்டியது.
இந்த நேரத்தில் தேர்தல் கமிஷனுக்கே லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் கைதாகவே, சசிகலா ஆடிப் போனார்.
இதனிடையே தமிழக அமைச்சர்களின் பல்வேறு ஊழல் வழக்குகள் வெளிவரத் தொடங்கி அவர்களின் நிலைமையும் ஆட்டம் கண்டது.
சசிகலா என்ன செய்திருக்க வேண்டும் என்றால், ஓ.பி.எஸ்.,சை முதல்வராகவே தொடரச் செய்து - பொதுச்செயலாளர் பதவியை மட்டுமே வகித்து சில வருடங்கள் கட்சியை அப்படியே கொண்டு சென்றிருக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தன்னை முதல்வராக அறிவித்திருந்தால் ஓரளவு பிரச்னை இல்லாமல் இருந்திருக்கும்.
காரணம் சசிகலாவிடம் பணம் இருப்பதால் எல்லா எம்.எல்.ஏ.,க்களும் ஜெயலலிதாவுக்கு கும்புடு போட்டதைப் போல் சசிகலாவுக்கு குனிந்து வணக்கம் சொல்லி இருப்பார்கள்.
ஆனால், மத்திய அரசு அதிரடியாக அதிமுக கட்சியை தன்வசப்படுத்தி விட்டது. தவிர தேர்தல் கமிஷனும் சசிகலா, தினகரன் இருவரது பதவி செல்லாது என மறைமுகமாக சொல்லி விட்டது.
காரணம் இவர்கள் இருவரையும் ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கி இருந்தார். 2016ல்தான் சசிகலா மீண்டும் கட்சியில் இணைந்தார். இதற்குப் பின்னரே தினகரன் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
அதிமுக விதிப்படி ஒருவர் கட்சியில் சேர்ந்து 5 வருடத்திற்கு மேல் ஆகி இருந்தால்தான் பொதுச்செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும். இவையும் சசிகலா அன் கோவுக்கு எதிராக அமைந்தது.
தவிர, பெங்களூரு சிறையை பைவ் ஸ்டார் ஹோட்டல் போல மாற்றிய விவகாரத்தில் சசிகலாவுக்கு எதிராக வீடியோ ஆதாரம் உள்ளது.
இந்த வழக்கு சசிகலாவுக்கு எதிராக அமைந்தால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதே போல் அந்நியசெலாவணி வழக்கில் தினகரன் சிறை சென்றே ஆக வேண்டும் என சொல்லப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில், அதிமுகவில் தங்களுக்கு இனி இடமில்லை என்பதை உணர்ந்த தினகரன், தன்னிடம் உள்ள 25 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் திமுக உதவியோடு சட்டசபையில் மீண்டும் ஓரு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என நினைக்கிறார்.
ஆனால், மத்திய அரசு தினகரன் அப்படி செய்ய நினைத்தால் அவரை மீண்டும் சிறைக்கு அனுப்ப தயாராக உள்ளது. இதையும் தினகரன் தெரிந்தே
வைத்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில்தான், ஓ.பி.எஸ்.,& இ.பி.எஸ்., இணைப்பு வரும் 15ம் தேதிக்குள் நடக்கும் என சொல்லப்படுகிறது.
அதோடு, இணைப்பு முடிந்த கையோடு
தேசிய ஜனநாயக கூட்டணியில்
அதிமுகவை சேர்ப்பது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த ஒரு சிலருக்கு
கேபினட் அந்தஸ்துடன் கூடிய அமைச்சர் பதவி கொடுக்க முன்வந்துள்ளது.
தவிர, இந்த இரு அணிகளும் சேருவதால் மன்னார் குடி மாபியாக்களின் ஆட்டம் முடிவுக்கு வரும் என நம்பும் மத்திய அரசு, எப்படியாவது அதிமுக தனது இன்னும் நான்கு வருட ஆட்சி காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறது.
ஒருவேளை ஆட்சி கவிழ்ப்பு நடந்தால் உடனடியாக தேர்தல் நடத்தாமல் ஒரு சில வருடங்கள் கவர்னர் ஆடசியை நடைமுறைப்படுத்தி பின்னர் ஓ.பி.எஸ்.,சுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
இது கதையல்ல நிஜம்.
Image may contain: 3 people, people smiling, selfie and closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...