நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, “சிதம்பர ரகசியம்’ என்பது போல, ஆலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது.
சிவனைத் தரிசிக்க, கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்றார் காரைக்கால் அம்மையார்.
சிவன் அவரை, “அம்மா!’ என்றழைத்து, “என்ன வரம் வேண்டும்?’ எனக் கேட்க, அவர், “எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்…’ என்றார்;
கேட்ட வரத்தை அருளினார் சிவன்.
அத்துடன், அவ்வூர் மன்னன் கனவில் தோன்றி, காரைக்கால் அம்மையார், தன் கோவிலில் தங்கப் போவதாகவும், தனக்கு பின்புறம் அவருக்காக ஒரு சன்னிதி எழுப்பும்படியும் கூறினார்.
அதன்படி மன்னன், நடராஜருக்கு பின்புறம் சன்னிதியில் பாதியை மறைத்து, சுவர் எழுப்பினான். அதனுள், ஐக்கியமானார் காரைக்கால் அம்மையார். தற்போதும், இவர் சிவனின் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதையே, “ஆலங்காட்டு ரகசியம்’ என்கின்றனர்.
இங்குள்ள அம்பாளை, “சமிசீனாம்பிகை’ என்பர்.
“சமிசீனம்’ என்றால், “ஆச்சரிய பாவனை!’
இவளது விக்ரகம், நடராஜரின் நடனத்தைப் பார்த்து ஆச்சரியத்துடன் நிற்பது போல செதுக்கப்பட்டுள்ளதால், இப்படி ஒரு பெயரை சூட்டினர்.
காளியுடன் சிவன் போட்டி நடனம் ஆடியபோது, அதன் உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்க நிலைக்குச் சென்றனர்.
தன் தலையிலிருந்த கங்கையைத் தெளித்து, அவர்களை எழுப்பினார் சிவன்.
இதனடிப்படையில் இன்றும் இங்கு தீர்த்தம் தரப்படுகிறது.
குமாந்தீஸ்வரர் என்ற சிறப்பு வாய்ந்த சிவலிங்கம் இந்த கோயிலில் அமைந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இத்திருக்கோவில் மாந்தி தோசத்திற்கு
உரிய பரிகார ஸ்தலம் ஆகும்
உரிய பரிகார ஸ்தலம் ஆகும்
இத்திருக்கோயிலில் மாந்தீஸ்வரரை சனிக்கிழமையில் தரிசித்து பரிகாரம் செய்ய மாந்திதோசம் விலகி சுபிட்ஷம் உண்டாகும்.
பிரகாரத்தில் சனீஸ்வரரின் மகனான மாந்தி வழிபட்ட மாந்தீஸ்வரர் இங்கு அருள் புரிகிறார். இவரை வணங்கினால் தீர்க்காயுள் கிடைக்கும்.
ஜென்ம ஜாதகத்தில்11ம் இடத்தைத்தவிர மாந்தி வேறு எந்த கட்டத்தில் இருந்தாலும் இங்கு வந்து பரிகாரம் செய்ய மாந்திதோசம் விலகும்.
அதோடு மட்டுமல்லாமல் ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டமத்து சனி, போன்ற கிரகநிலை இருப்போர், மாந்தீஸ்வரரை வணங்கினால் நலம் பெறலாம் என்று கோயிலில் உள்ள குறிப்பு சொல்கிறது.
மாந்தி தோஷ பரிகாரம்:
மாந்தி கிரக தோஷத்தை விலக்கும் சக்திபடைத்தவர் சிவபெருமான் ஒருவரே அதேபோல மாந்தி கிரகத்தால் வரும் யோகப் பலனையும் இரட்டிப்பாகத் தருபவரும் சிவபெருமான்தான். சிவபெருமானின் நட்சத்திரம் உத்திரம். உத்திர நட்சத்திரம் வரும் நாளன்று அதிகாலையில் இக் கோவிலுக்கு சென்று சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும் .
இதேபோல் ஒன்பது மாதங்களில் வரும் உத்திர நட்சத்திரத்தன்றும் சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும் .
இவ்வாறு தொடர்ந்து ஒன்பது உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு பாலாபிஷேகம் செய்பவர்களுக்கு மாந்தியால் வரும்தோஷம் விலகும்.
யோகப் பலனும் இரட்டிப்பாக்க் கிடைக்கும்.
இவ்வாறு தொடர்ந்து ஒன்பது உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு பாலாபிஷேகம் செய்பவர்களுக்கு மாந்தியால் வரும்தோஷம் விலகும்.
யோகப் பலனும் இரட்டிப்பாக்க் கிடைக்கும்.
இப்பரிகாரம் செய்வதற்குமுன் இங்குள்ள பத்ரகாளியம்மனை தரிசிக்கவேண்டும்.
தேவர்களை, அசுரர்கள் கொடுமை செய்த போது, தவத்தில் இருந்த சிவனை எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மன்மதனை, அவர் மீது மலர் அம்பு வீசச் செய்தனர்.
கோபத்துடன் அவர் நெற்றிக் கண்ணைத் திறக்க, மன்மதன் பஸ்பமானான்.
சிவனின் உக்கிரம் தாங்காத தேவர்களும், மகரிஷிகளும் கோபம் தணியும்படி வேண்டினர்.
அவர்களுக்கு காட்சி தந்த சிவன், ஒரு ஆலமரத்தடியில் லிங்க வடிவில் எழுந்தருளினார்.
இதனால், இந்த ஊருக்கு, “திருவாலங்காடு’ என்றும், சுவாமிக்கு, “வடாரண்யேஸ்வரர்’ (ஆலங்காட்டு அப்பர்) என்றும் பெயர் ஏற்பட்டது.
பிரகாரத்தில் எட்டு கணபதிகளை தரிசிக்கலாம்.
அஷ்ட கணபதி எனப்படும் இவர்கள், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தருபவர்களாக உள்ளனர்.
நாய் வாகனம் இல்லாத பீஷண பைரவர், உபதேச தட்சிணாமூர்த்தி ஆகியோரும் இங்குள்ளனர்.
சிவன் நடனமாடியபோது, அவரது அணிகலன்கள் பூமியின் 5 இடங்களில் விழுந்தன. அவற்றை 1. ரத்ன சபை, 2. கனக சபை, 3. ராஜாத சபை, 4. சித்ர சபை, 5. தாமிர சபைகள் என்று அழைப்பர். அதில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் தலம் முதலாவது ரத்ன சபையாக திகழ்கிறது.
ஒருமுறை காளிக்கும், சிவனுக்கும் நடனப் போட்டி நடந்தது.
சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள்.
நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி இருக்கிறது.
வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்ல வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.
இந்த தலத்தின் பின்பக்கம் வலது மூலையில் கோயிலின் தல விருட்சமான மிகப்பெரிய ஆலமரம் வீற்றிருக்கிறது.
சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் கோவில் உள்ளது. இது தவிர, சொந்த வாகனத்தில் செல்வோர் தேசிய நெடுஞ்சாலை 205 ல் (சென்னை – ஆவடி – திருவள்ளூர் – ரேணிகுண்டா வழி) சென்றால் இக்கோயிலை அடையலாம்.
பேருந்து மார்கமாக செல்ல வேண்டும் என்றால், தாம்பரம் அல்லது ஆவடியில் இருந்து திருவள்ளூர் சென்று அங்கிருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் செல்லலாம். அதே போல அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் சில பேருந்துகள் திருவாலங்காடு வழியாகவும் இயக்கப்படுகின்றன.
இந்த திருத்தலம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தலமாகவும் உள்ளது தனி சிறப்பு ஆகும்.
No comments:
Post a Comment