திருப்பெண்ணாகடம் என்ற ஊரில் (தற்போது பெண்ணாடம்) வாழ்ந்து வந்த அச்சுத களப்பாளர் என்ற சிவபக்தர், குழந்தைப்பேறு வேண்டி இறைவனை வேண்டி, அவரது குருவின் வார்த்தைப்படி, திருமுறைகளில், இடைநூல் விட்டுப்பார்த்தார். அப்போது, திருஞானசம்மந்தர் பெருமான், ஸ்வேதாரண்யம் என்று வடமொழியிலும், திருவெண்காடு என்று தமிழிலும் வழங்கப்படும் தலத்தில் இறைவி பிரம்மவித்தியாநாயகி சமேதராக திருவண்காடர் என்ற திருப்பெயருடன் வீற்றிருக்கும் சிவபெருமான் மீது பாடிய ஒரு பதிகம் வரப்பெற்றார்... அதனை பாராயணம் செய்து அக்கோயிலில் உள்ள மூன்று தீர்த்தங்களிலும் நீராடி, இறைவனை வேண்டி, மெய்கண்டார் எனும் செல்வத்தை பெற்றனர்..
அக்குழந்தையே பின்னாளில் "சிவஞானபோதம்" என்ற சைவ சித்தாந்தத்தை அருளியது..
அப்பதிகம் பின்வருமாறு...
பேய் அடையா பிரிவு எய்தும்
பிள்ளையினோடு உள்ள நினைவு
. ஆயினவே வரம் பெறுவார்
ஐயுறவே வேண்டாம் என்றும்
வேயன தோள் உமை பங்கன்
. வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத்
. தோயாவாம் தீவினையே.
பிள்ளையினோடு உள்ள நினைவு
. ஆயினவே வரம் பெறுவார்
ஐயுறவே வேண்டாம் என்றும்
வேயன தோள் உமை பங்கன்
. வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத்
. தோயாவாம் தீவினையே.
எனவே, குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர், இத்திருக்கோயில் சென்று, முக்குளநீராடி, இறைவனை தரிசனம் செய்து, தேவார பாராயணம் செய்து, ஆயுளும் அறிவும் கூடிய குழந்தை செல்வம் பெறலாம்.
நம்பினார் கெடுவதில்லை.
No comments:
Post a Comment