💠 ராசிக்கல் என்பது இன்றைய காலத்தில் பலரது நம்பிக்கையாகி வருகிறது. சரியான ராசிக்கல்லை நாம் அணிவதன் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் மட்டுமல்லது ஏற்றங்களும் உண்டாகும். ராசிக்கல் நமது உடலையும், மனதையும் நமது ராசி கிரகத்துக்கு ஏற்ப ஒருங்கிணைக்க வைத்து நமக்கு நன்மைகள் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.
💠 ஆனால் ராசிக்கல்லை தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எந்தெந்த ராசிக்கல் பொருத்தமாக இருக்கும் என்பது முக்கியமான ஒன்று. நமது ராசிக்கு பொருத்தமில்லாத ராசிக்கல்லை நாம் அணிவதன் மூலம் நன்மைகள் நடக்காதது மட்டுமல்ல சில சமயம் சில ஆபத்தான விளைவுகளைக் கூட ஏற்படுத்தலாம். எனவே, எந்தெந்த ராசிக்கு எந்தெந்த ராசிக்கல் பொருத்தமானவை என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
உங்கள் ராசிக்கான ராசிக்கல் :
💠 மேஷம் - பவளம்
💠 ரிஷபம் - வைரம்
💠 மிதுனம் - மரகதம்
💠 கடகம் - முத்து
💠 சிம்மம் - மாணிக்கம்
💠 கன்னி - மரகதம்
💠 துலாம் - வைரம்
💠 விருச்சிகம் - பவளம்
💠 தனுசு - கனக புஷ்பராகம்
💠 மகரம் - நீலக்கல்
💠 கும்பம் - நீலக்கல்
💠 மீனம் - கனக புஷ்பராகம்
எந்தெந்த கற்களை எந்த உலோகத்தோடு எந்த விரல்களில் அணிய வேண்டும்?
💠 மாணிக்கம் - தங்கம் - மோதிர விரல்
💠 முத்து - தங்கம் வெள்ளி - ஆட்காட்டி விரல், மோதிர விரல்
💠 புஷ்பராகம் - தங்கம் - ஆள்காட்டி விரல்
💠 கோமேதகம் - வெள்ளி, தங்கம் - மோதிர விரல், நடுவிரல்
💠 மரகதம் - தங்கம், வெள்ளி - சுண்டுவிரல், மோதிர விரல்
எந்த கல்லை எந்த கிழமையில் அணிய ஆரம்பிக்க வேண்டும்?
💠 ஞாயிறு : மாணிக்கம், கோமேதகம்
💠 திங்கள் : முத்து, வைடூரியம்
💠 செவ்வாய் : பவளம்
💠 புதன் : மரகதம்
💠 வியாழன் : புஷ்பராகம்
💠 வெள்ளி : வைரம்
💠 சனி : நீலம்
No comments:
Post a Comment