Friday, August 18, 2017

மனம் இருந்தால் போதும்...!!!

ஒரு பிச்சைக்காரன் சாலையில் சென்ற பெரியவரிடம் பிச்சை கேட்டான். இளகிய மனம் படைத்த பெரியவர் அவனுக்குப் பிச்சையிட வேண்டும் என்ற ஆர்வத்தில், தன் கையைச் சட்டைப் பைக்குள் விட்டுத் துழாவினார். ஒரு காசுக்கூடக் கிடைக்கவில்லை. வேதனையோடு பிச்சைக்காரனிடம், பணமில்லையே தம்பி! என்றார். அதைக் கேட்ட பிச்சைக்காரனின் முகத்திலே ஓர் ஒளி...!
.
ஐயா, காசு இல்லை என்பதற்காக நீங்கள் வருந்த வேண்டாம். பிச்சை கொடுப்பதைக் காட்டிலும் பெரிய உதவி ஒன்றை நீங்கள் எனக்குச் செய்துவிட்டீர்கள்! யாருமே என்னை மதிக்காதபோது தம்பிஎன்றல்லவா என்னை அழைத்து விட்டீர்கள், அதுபோதும் என்றான் அவன்.
.
பணமோ காசோ கொடுப்பது மட்டுமல்ல; இனிமையாகப் பேசுவதும் அறம் தான். யாவருக்குமாம் பிறருக்கு இன்னுரை தானே என்பதைத் திருமூலரும் கூறியிருக்கிறார்...!
.
‌எனவே பணம் இருந்தால் தான் அறம் செய்ய முடியும் என்பதில்லை...! மனம் இருந்தால் போதும் ஆயிரம் அறங்கள் செய்யலாம்...!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...