நடிகர் அசோகன் மீது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த அன்பு உண்டு. அசோகன் நன்றாக சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து வரும் வித விதமான சைவ, அசைவ உணவுகளை சாப்பிடுவதற்காகவே வேறு படப்பிடிப் பில் இருந்தாலும் மதியம் எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கு அசோகன் வந்துவிடுவார். அவரை நன்கு சாப்பிட வைத்து பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம். யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள்? என்று கவனித்து அதை அவர்களுக்கு அதிகம் போடச் சொல்வார் எம்.ஜி.ஆர்.!
‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் அசோகன் தயாரித்த படம். திமுகவில் இருந்து 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது சத்யா ஸ்டுடியோவில் ‘நேற்று இன்று நாளை’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தார். விஷயம் அறிந்து சத்யா ஸ்டுடியோ முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர்.
தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவியது. ‘இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி போல மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது’ என்றும் ‘அண்ணா திராவிட முன்னேற் றக் கழகம் என்ற பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது’ என்றும் கவியரசு கண்ணதாசன் பதிவு செய்துள் ளார். ‘நேற்று இன்று நாளை’ படத்துக்கு வசனகர்த்தா, திமுக தலைவர் கருணா நிதியின் உறவினர் சொர்ணம். கொந் தளிப்பான நிலைமையை அறிந்து சொர்ணத்தை மனிதாபிமானத்தோடு பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!
நீண்ட தயாரிப்பில் இருந்த ‘நேற்று இன்று நாளை’ படம் தாமதமானதற்கு அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை களும் காரணம். சென்னையைச் சேர்ந்த டிமாண்டி என்பவர்தான் படத்துக்கு பைனான்ஸ் செய்தார். படம் தாமதமானதாலோ என்னவோ, ஒரு கட்டத்துக்கு மேல் அவர் பைனான்ஸ் செய்ய முன்வரவில்லை. படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பள பாக்கி இருந்தது. இதனால், அசோகன் மன உளைச்சலில் இருந்தார்.
அசோகனின் நிலைமையை அறிந்த எம்.ஜி.ஆர்., அவரை வரச் சொல்லி யார், யாருக்கு எவ்வளவு பணம் பாக்கி என்று கேட்டார். அசோகன் தெரிவித்த தொகை முழுவதையும் எம்.ஜி.ஆர். அவருக்குத் தந்து, பாக்கி வைத்திருந்த எல்லோருக்கும் கொடுத்துவிடச் சொன்னார்.
பணம் கிடைத்த அன்று இரவே ஒவ் வொருவர் வீடாகச் சென்று பணத்தை செட்டில் செய்தார் அசோகன். படத்தில் சண்டைக்காட்சியில் நடித்திருந்த எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு இரவு 12 மணிக்குச் சென்று அவருக்கு பணத்தைக் கொடுத்தார்.
எம்.ஜி.ஆரின் உதவியோடு ‘நேற்று இன்று நாளை’ படம் முடிக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக 100 நாட் களை கடந்து ஓடி வசூலைக் குவித்தது. இதில் ஒரு முக்கியமான விஷயம். எல் லோருக்கும் சம்பள பாக்கியை கொடுப் பதற்காக அசோகனிடம் பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்., அவரது நிலை மையை உணர்ந்து தனது சம்பள பாக்கி யான லட்சக்கணக்கான ரூபாய்களை பெற்றுக் கொள்ளவே இல்லை என்பது வெளியே தெரியாத உண்மை.
No comments:
Post a Comment