உன் வீழ்ச்சிக்கு வித்திடும் 20 பகைவர்கள் யார் யார்? தெரிந்து கொள், உணர்ந்து கொல்
வாழ்க்கை என்பது ஒரு ஓட்டப்பந்தயம் போன்றது என்று சொல்வார்கள். இதில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஓடும் வேகத்தை சற்று குறைத்தால் கூட
அடு த்தவர் உங்களை தாண்டி சென்றுவிடுவார். அத்தகைய ஓட்டப் பந்தயத்தில் உங்க ளை வீழ்த்தும் 20 பகைவர்களையும் அவர்களின் சிறப்பு குணங்களை இங்கு பார்க்க விருக்கிறோம்.
1) சோம்பல் (Laziness)
இது உங்களை முற்றிலும் ஒரே இடத்தில் கட்டிப்போட்டு, உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும் முதல் எதிரி.
*
2) சோர்வு (Tired)
சோம்பலை வென்றாலும், ஒரு சிறு தடை வந்தபோதும் இந்த பகைவன் உங்களை முழுக்க ஆட்படுத்திக் கொண்டு உங்களது முன்னேற்றத்தை தடுத்திடுவான்.
*
3) அறியாமை (Ignorance)
ஒருவிஷயத்தை பற்றி அறிந்திடாமல் பேசவும், செய்யவும் தூண்டி உங்களை அதன் (அறியாமையின்) பிடியில் வைத்திருந்து உங்களை அவமானத்திற்கு உள்ளாக்கி, உங்கள் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டு க்கட்டையாக இருக்கும்.
*
4) பயம் & பதற்றம் (Fear & Anxiety)
இருக்கும் எதிரிகளிலேயே இதுதான் மிகவும் அபாயகரமான எதிரி ஆவான். இந்த எதிரி உங்களுக்குள் இருக்குமேயானால், நீங்கள் எளி தாக செய்துமுடிக்கும் வேலைகள் கூட இந்த பயத்தினால் உங்களுக்கு கடினமாக தோன்றும் அதனால் உங்களுக்கு பதற்றம் தொற்றிக் கொண்டு நீங்கள் செய்யும் செயலில் தோல்வி அடைவீர்கள்.
*
5) கவலை (Worried)
உங்கள் முயற்சி தோற்றுப் போகும் போது இந்த பகைவன் உங்களை மிக எளிதாக தனது ஆளுமைக்குள் எடுத்துக் கொள்வான். மேலும் தோல்வியுற்றதை பற்றியே உங்களைபேசவும், எண்ணவும் தூண்டும் . அடுத்த கட்டத்திற்கு உங்களை கொண்டு செல்லாமல் பார்த்துக் கொள்வான்.
*
6) மனஅழுத்தம் (Mental Stress)
கவலை எனும் பகைவன் உங்களை ஆட்கொண்டு, அதிக தொந்தர வுகள் செய்யும் போது உங்களை மன அழுத்தம் எனும் பகைவன் உங்களை மிக எளிதாக வென்று விடுவான். அதன்பிறகு உங்களது மனம் சோர்ந்து போகும். உடல் தளர்ந்து போகும்.
*
7) தீய சகவாசம் (Bad Friendship)
இது மிகவும் அருவருக்கத் தக்க பகைவன் ஆவான். காரணம் தீயோர் சகவாசம் என்பது நண்பனாக நடித்து, உங்களை பல்வேறு தீய பழக்கங்கங்களுக்கு அடிமை யாக்கி உங்கள் உள்ளத்தை உருக்கி, உடலை கெடுத்து உங்களை நோயாளியாக மாற்றுவிடும் சக்தி இந்த தீய சகவாசத்திற்கு உண்டு.
*
8) தீய பழக்கம் (Bad Habit)
தீயோர் நட்பினால் உண்டாகும் உங்களையும் நீங்கள் அறியாமல் உங்களுக்குள் பற்பல தீய பழக்கங்களுக்கு அடிமையாக நேரிடும். இதனால் உங்கள் எண்ணங்கள் மங்கிப்போகும். உடலின் ஆரோக்கி யமும் சீர்கெட்டுவிடும்.
*
9) கோபம் (Angry)
மனமும் உடலும் கெட்டுப் போகும். தானாகவே உங்கள் மீது உங்க ளுக்கே அல்லது அடுத்தவர் மீதோ தேவையற்ற கோபத்தை காட்டு வீர்கள். இதனால் உறவுகள் கெட்டுப் போகும். நட்பு நசுங்கி ப்போகும்.
*
10) வெறுப்பு (Hatred)
உங்களை, உங்கள் உறவுகள் மீதும் நட்புக்கள் மீதும் உங்களுக்குள் இருக்கும் கோபம் நாட்பட நாட்பட வெறுப்பை உண்டாக்கி, உறவுக ளையும் நட்புக்களையும் உங்களிடம் நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ளும்.
*
11) சொல்பேச்சு கேளாமை (Not ready to ear)
இந்த வெறுப்பின் காரணமாக, நீங்கள், உங்களுக்கு நல்லது சொல்ப வர்களின் வா ர்த்தைகளைக் கூட நீங்கள் கேட்காமல் அவர்கள் மனத்தை புண்படுத்தி விடுவீர்கள்.
*
12) அசட்டு தைரியம்
பிறர்சொல்வதன் மீதுள்ள வெறுப்பு உங்களுக்குள் ஒருஅசட்டு தைரியம் உண்டாகும். இதனால் பல விபரீத செயல்களில் நீங்களா கவே சிக்குண்டு வாழ்க்கையை பாழ்படுத்திக் கொள்வீர்கள்.
*
13) எச்சரிக்கையின்மை (Caution)
இந்த அசட்டு தைரியத்தால் அதாவது யார் என்ன செய்துவிட முடியும். என் நண்பன் சொல்கிறான் நான் அவனை கண் மூடித்தனமாக நம்பு வேன் என்றிருப்பது. அதாவது உடன் இருப்பவர் நல்லவரா கெட்டவரா என்பதில் அறிந்து செயல்படுவதில் எச்சரிக்கையின்மை இருந்தால் அது நிச்சயமாக தோல்வியில் தான் முடியும்
*
14) உணர்ச்சி வசப்படுதல் (Very Sensitive)
அசட்டு தைரியம் மற்றும் உணர்ச்சி வசப்படுதல் காரணமாக நீங்கள் செ ய்யும் தீய செயலால், காகம் உட்கார பனம் பழ வீழ்ந்த கதையை போல உங்களுக்கு லாபம் வந்தால், அதன் காரணமாக உணர்ச்சி வசப்பட்டு, இன்னும் அதிகமான அசட்டு தைரியம் வந்து, இன்னும் இன்னும் உங்களது வீழ்ச்சிக்கு நீங்களை குழி தோண்டு வீர்கள்.
*
15) பொறாமை (Jealous)
பிறரது நல் வார்த்தைகளுக்கு கூட காதுகொடுத்து கேட்காமல் இருந்ததன் பலனாக உங்களுக்கு நட்டமும் மன உளைச்சலும் ஏற்பட்டு, உங்களுக்கு நீங்களே பெரும் சுமையாக தோன்றும்போது, அடுத்தவர் மீது தேவையற்ற பொறாமையும் வஞ்சமும் தோன்றும்
*
16) அலட்சியப் போக்கு (Carelessness)
பொறாமை உங்களிடம் வந்துவிட்டால், தானாகவே அலட்சிய ப்போக்கும் உங்களை ஒட்டிக் கொள்ளும். இதன் காரணமாக பெரிய வர் சிறியவர், படித்தவர், பதவியில் இருப்பவர் என்றெல்லாம் நினை க்காமல் அனைவரையும் அலட்சியம் செய்வீர்கள். அவர்கள் உங்களு க்கு செய்யும் நற்செயல்களையும் உதவிகளையும் அலட்சியப் படுத்துவீர்கள்.
*
17) ஆணவ போக்கு (Arrogance)
அலட்சியப் போக்கு உங்களின் இதயத்தில் குடிகொள்ளும்போது தானாகவே உங்க ளின் மூளையை ஆணவப் போக்கு ஆக்கிரமித்து விடும். இதனால் நீங்கள் செய்வது தான் சரி, அது தவறாக இருந்தாலும் அதுதான் சரி என்று வாதாடுவீர்கள். உங்களை யாராவது திருத்தி நல்வழிப்படுத்த நினைத்தாலும் அதனை நீங்கள் ஏற்காமல் அவர்களை உதாசீனம் செய்வீர்கள்.
*
18) பழிக்கு பழி (Vengeance)
பொறாமை, அலட்சியப் போக்கு, ஆணவபோக்கு ஆகிய மூன்று பகை வர்களிடம் நீங்கள் சிக்கிக் கொண்டால், இவர்கள் மூவரும் உங்களை பழிக்கு பழி என்னும் பகைவனிடம் கொண்டு செல்வர். இதனால் உங்களை திருத்தி நல்வழிப்படுத்த நினைப்போரை, உங்க ளது நலன் விரும்பிகளைக் கூட பழி வாங்கவேண்டும் என்று துடிப்பீர்கள்.
*
19) வீண்பிடிவாதம் (Unnecessary Stubbornness)
நீங்கள்செய்வது தவறு என தெரிந்திருந்தாலும் அதனை ஒத்துக்கொ ள்ளும் மனப்பக்குவம் இன்றி, நீங்கள் செய்வதுதான் சரியென்று வீண்பிடிவாதம் பிடிக்கச் சொல்லும். அதனையே செய்யத் தூண்டும்.
*
20) விரக்தி (Frustrated)
மேற்படி பகைவர்கள் உங்களை அடிமைப்படுத்தும்போது, நீங்கள் செய்த செயல் தவறு என்று உணரும்போது அதிலிருந்து தப்பிக்க வழியின்றி விரக்தி என்ற எமனிடம் சிக்கி, தற்கொலை என்னும் கொடூர முடிவை எடுக்கத் தூண்டும்.
*
No comments:
Post a Comment