காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிட்டு முடித்ததும் ஒரு சில பழக்கங்களைப் பலர் பின்பற்றுகிறார்கள். நமக்கே தெரியாமல் பல தவறுகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம். உணவு உட்கொண்டவுடன் செய்யவே கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவற்றை பற்றி இங்கு காண்போம்.
பழம் :
சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. சாப்பிடவுடன் பழங்களை சாப்பிடுவதன் மூலம் பழங்களே முதலில் ஜீரணமடையும். எனவே பழங்களின் சத்து நமக்கு கிடைக்காமல் போய்விடும். எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
புகைபிடிப்பது :
பெரும்பாலானோர் சாப்பிட்டு முடித்ததும் புகைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது தவறான பழக்கம். இயல்பாகவே புகைபிடிப்பது உடலுக்கு தீங்கு எனும் பட்சத்தில், சாப்பிட்டு முடித்தவுடன் புகைப்பிடிப்பது செரிமானத்தை விரைவில் நடத்தவிடாமல் தடுத்து அஜீரணத்தை உண்டாக்கும். எனவே, புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற இரண்டு பழக்கங்களையும் சாப்பிட்டு முடித்தவுடன் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
டீ, காப்பி வேண்டாம் :
சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். தேயிலைத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.
குளியல் :
சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.
உடற்பயிற்சி மேற்கொள்வது :
உடற்பயிற்சி செய்வதற்கு தகுந்த நேரம் மிகவும் அவசியமான ஒன்று. அதிகாலை அல்லது மாலை வேளைகளில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி மேற்கொள்வது பரிந்துரைக்கப்பட்ட ஒன்று. ஆனால் நேரமின்மையைக் காரணம் காட்டி சிலர் காலை உணவுக்குப் பின்னரும், மதிய வேளைகளிலும் உடற்பயிற்சி செய்கிறார்கள். இது முற்றிலும் தவறான ஒன்று. இதனால் வயிற்றுப் பிடிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நடக்கக் கூடாது :
சாப்பிட்ட பின்பு நடக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுக்கிறது. இதனால், ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்த தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.
தூங்கக் கூடாது :
மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்டபின் அரைமணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.
No comments:
Post a Comment