Saturday, October 28, 2017

எளிய முறையில் சரணாகதி விளக்கம்....

மாட்டு வண்டிக்கு
உயிர் இல்லை

மாட்டுக்கு
உயிர், அறிவு இரண்டும் உண்டு
ஆனால் வண்டிக்காரன்
உயிரில்லாத வண்டியை
அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..
எந்த இடம் செல்ல வேண்டும் என்பதை
தீர்மானித்து
வண்டியை
செலுத்துவான்.
எவ்வளவு தூரம்
எவ்வளவு நேரம்
எவ்வளவு பாரம்
அனைத்தையும்
தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே!
அறிவிருந்தும்
சுமப்பது தானாக இருந்தாலும்
மாட்டால்
ஒன்றும் செய்ய இயலாது
அதுபோல
உடம்பு என்ற
ஜட வண்டியை
ஆத்மா, உயிர்
என்ற மாட்டுடன் பூட்டி
இறைவன் என்ற
வண்டிக்காரன் ஓட்டுகிறான்
அவனே தீர்மானிப்பவன்
அவன் இயக்குவான்
மனிதன் இயங்குகிறான்
எவ்வளவு காலம்
எவ்வளவு நேரம்
எவ்வளவு பாரம்
தீர்மானிப்பது இறைவனே
இதுதான்
நமக்காக
இறைவன் போட்டிருக்கும் DESIGN
இதுதான்
இறைவன் நமக்கு
தந்திருக்கும் ASSIGNMENT
இதை
உணர்ந்தவனுக்கு
துயரம் இல்லை
இதை
உணராதவனுக்கு
அமைதி இல்லை...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...