இன்று நான் உங்களுடன் நம் உடலில் கொழுப்பு கூடி ஏற்படும் அபாய நிலை பற்றி பதிந்துள்ளேன் நட்புக்களே படித்து பயனடையுங்கள்
இதயத்தில் இருந்து நம் உடலின் மற்ற உறுப்புக்களுக்கு ஆக்சிஜன், சக்தி, ஊட்டச்சத்து நிறைந்த இரத்தத்தை எடுத்து சென்று விநியோகிக்கும் இரத்தக்குழாய்கள் நாடிகள் (Arteris) எனப்படும். இது நாம் எல்லோரும் அறிந்ததே, இந்த நாடிகள் பொதுவாகவே வளைந்து மீள்தன்மை ( Flexible and elastic ) பெறக்கூடிய வையாக இருக்கும் காலம் செல்ல செல்ல இவற்றின் சுவர் தடிப்பு தன்மை அடைகின்றது இதனால் இரத்தக்குழாயின் உள் விட்ட அளவு குறைகின்றது இதன் மூலம் நாடிகள் எடுத்து செல்லும் இரத்த அளவும் குறைகின்றது இதன் மூலம் உறுப்புகளிற்கு செல்லும் சக்தி ஊட்டச்சத்தின் அளவும் குறைகின்றது இது சாதரணமான நம் உடலில் நடைபெறும் வயதிற்கேற்ற மாற்றமாகும். இந்த நாடிகள் தடிப்படைவது ஆத்ராஸ்கிளாராசிஸ் ( Artherosclarosis ) என அழைக்கப்படும்.
இதனை விட நம் உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகளும் இந்தவிதமான ஒரு நிலையை ஏற்படுத்தி இளம் வயதிலேயே பல இருதய நோய்களுக்கு வழிவகுக்கின்றது
இது நமது நாடிகளில் கொழுப்பு கொலாஸ்டிரால் போன்ற பதார்த்தங்கள் நாம் அளவுக்கதிகமாக உட்கொள்வதாலும் அப்படி உட்கொள்ளும் கொழுப்பு பதார்த்தங்கள் சரி வர சக்தியாக எரிக்கப்படாததனாலும் அதாவது உடற்பயிற்சி குறைவதனால் நம் உடலில் இரத்தத்தின் அளவில் கூடி இரத்தக்குழாயில் படிவடைய தொடங்குகின்றது இப்படி படிந்து ஒரு கட்டி போல (plaque ) நாடி குழாயின் சுவர்களில் தடிப்பு தன்மையை ஏற்படுத்துகின்றது இதன் மூலம் உள் விட்டம் குறைய இரத்த ஓ ட்ட அளவு குறைகின்றது, இதனை படிப்படியாக தடிப்படையும் progressive thickning of the inner line wall of the ateries எனப்படும். இங்கு ஆத்ராஸ்கிளாராசிஸ் ஏற்பட்டு நம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கின்றது
இங்கு படிவடைந்த பிளேக் கொழுப்பு துகள்கள் சிலவேளைகளில் உடைந்து சிறு சிறு துண்டுகளாக இரத்த ஓ ட்டத்துடன் கலந்து ஓடி இரத்தக்குழாய் களில் அடைப்பையும் ஏற்படுத்துகின்றது இது fat embolisim என்று அழைக்கப்படும். பொதுவாக இருதயத்திற்கு இரத்த ஓட்டம் கொடுக்கும் நாடிகள் மூளைக்கு இரத்த ஓட்டம் கொடுக்கும் நாடிகளை அடைப்பதனால் (Angina) அஞ்சைனா, ஹார்ட் அட்டாக், ஸ்ராக்(Stroke) என்பன ஏற்படுகின்றன
இந்நிலை மிகவும் பெரிய ஆபத்தான ஒரு காரணியாகும் cardio vascular disease (CVS)நோய் ஏற்படுவதற்கு
இது ஏற்பட காரணங்களை பார்ப்போம்
ஸ்மோகிங் - புகை பிடித்தல்
a high-fat diet - அதிக கொழுப்புள்ள உணவு உட்கொள்ளுதல்
lack of exercise - உடற்பயிற்சி குறைவு
being overweight or obese - உடல் எடை கூடுதல்
having either type 1 or type 2 diabetes - நீரழிவு நோய்
having high blood pressure (hypertension) - உயர் குருதி அமுக்கம்
having high cholesterol - உயர் கொலாஸ்ட்டிரால் அளவு
பொதுவாக இந்நிலை 40 வயதிற்கு மேற்பட்டவருக்கு ஏற்படுகின்றது ஆனாலும் வரையறுத்து கூறுவது மிகவும் கடினம், எல்லா வயது வந்தவர்களுமே ஒரு நிலையில் இதனால் பாதிக்கப்படும் அபாயம் உண்டு இது பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கின்றது, பெண்களில் சுரக்கப்படும் ஈஸ்ட்ராஜன் எனும் ஹார்மோனில் இதற்கு எதிரான புரதம் உண்டு இந்நிலை ஏற்காமல் தடுக்க என ஆய்வுகள் கூ றுகின்றன
இதற்கான சிகிச்சை எனப்படும் போது முதலில் வருமுன் காப்பது அவசியமாகின்றது, அடுத்ததாக நோய் ஏற்படாமல் தடுத்து உக்கிரத்தை குறைக்க வேண்டி இருக்கின்றது
இதை நாம் நம் வாழ்க்கை முறையில் மாற்றங்களையும் நல்ல உணவுப்பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்தி கொள்வதனால் தடுக்க முடியும்
மேலும் ACE inhibitors உயர் குருதி கட்டுப்பாட்டு மருந்துகள் கொலாஸ்ட்டிராலை குறைக்கும் ஸ்டாட்டின், இரத்த கட்டிகளை தடுக்க ஆண்டி பிளாட்லாட் போன்ற மாத்திரைகளை மருத்துவர் வழங்கி நிலையை கட்டுப்படுத்துவார்
சில நிலைகளில் சத்திர சிகிச்சை தேவை ஏற்படுகின்றது ஆஞ்சியோபிளாஸ்டி நாடிகளை உள்விட்டத்தை கூட்டுவதற்கும் பைபாஸ் அடைப்புள்ள குழாய்களை வெட்டி பொருத்தவும் செய்யப்படுகின்றது
இன்று உலகில் மாரடைப்பும் பக்கவாதமும் இறப்புக்கு காரணமாக முதல் நிலையிலுள்ளது
அதில் ஆத்ராஸ்கிளாராசிஸ் முதன் நிலை அபாய காரணியாக உள்ளது
எனவே நாம் அளவோடு உண்டு நன்றாக பழங்களும், பச்சை காய் கறிகளும் அதிக அளவில் நம் உணவில் சேர்த்து உடற்பயிற்சி செய்து சாதாரண நடை பயிற்சியே ஒவ்வொரு நாளும் போதுமானது, மருத்துவ பரிசோதனைகள் செய்து நம் கொழுப்பின் அளவு குருதி அமுக்கம் இவற்றை அடிக்கடி சரிபார்த்து வருமுன் காத்து நம் உடல் நலனை பேணி ஆரோக்கியமாக வாழ்வோமாக ...

No comments:
Post a Comment