*ஜி.எஸ்.டி.,:ரூ.3 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை*
*ரூ.3கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை ரிட்டன் தாக்கல் செய்தால் போதுமானது என நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி., கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.*
*கடந்த ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி முறை அமல்படுத்தப்பட்டது.*
*தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மத்திய நிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றுவருகிறது.*
*இன்று டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் , ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.*
*மேலும் ரூ.3கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை ரிட்டன் தாக்கல் செய்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.*
*நகை வாங்குபவர்களும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் நகை வாங்குபவர்களுக்கு பான் கார்டு, ஆதார் கார்டு அவசியம் இல்லை.*
*அந்த விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
*ஏற்றுமதியாளர்களுக்கு ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.*
*கேஸ்-ஸ்டவ் உள்பட பல்வேறு நுகர்வோர் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யிலிருந்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது.*
*ஏசி மற்றும் ஏசி அல்லாத ஓட்டல்களுக்களுக்கான ஜி.எஸ்.டி விகிதம் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.*
*அதன்படி, ஏசி உணவகங்களுக்கான ஜி.எஸ்.டி விகிதம் 28 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.*
பெட்ரோலுக்கு GST போடாமல் அம்பானிய காப்பாத்தரீங்களே பாஸ்
56 % இப்ப நாம பெட்ரோலுக்கு அழரோம் GST அதிக பட்சமாக 28 %தான்
அப்ப யாரை மோடி காப்பாத்துகிறார் என நீங்களே கூறுங்கள்?????
56 % இப்ப நாம பெட்ரோலுக்கு அழரோம் GST அதிக பட்சமாக 28 %தான்
அப்ப யாரை மோடி காப்பாத்துகிறார் என நீங்களே கூறுங்கள்?????
No comments:
Post a Comment