எனக்கு ஒரு டவுட்டு. இந்தத் தூய்மை இந்தியா திட்டத்த்ன் கீழ் கிராமங்களில் கழிப்பறை கட்டுகிறார்கள். அரசாங்கத்திலிருந்து மானியம் வேறு கொடுக்கிறார்கள். கழிப்பறை மற்றும் செப்டிக் டாங்க் கட்டுவார்கள். மிக்க மகிழ்ச்சி. ஆனால் முகியமான ஒன்றை மறந்து விட்டார்களே. அதுதான் தண்ணீர். ஒருவருக்கு ஒரு முறை டாய்லெட் போக குறைந்த பக்ஷமாக 5 லிட்டர் தண்ணீர் தேவை என்றால் ஒரு 4 பேர் கொண்ட குடும்பம் தினசரி 2 முறை டாய்லெட் உபயோகித்தால், ஒரு நாளைக்கு 40 லிட்டர் தண்ணீர் தேவை. இந்த்த் தண்ணீரும் வருடம் முழுவதும் ஒவ்வொரு நாளும் தவறாமல் கிடைக்க வேண்டும். அதுவும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், அதுவும் வீட்டுக்குள்ளேயே கிடைக்க வேண்டும்.
இவர்கள் வயல்வெளியில் மலஜலம் கழித்துக் கொண்டிருந்த போது சுற்றுச் சூழல் மாசுபட்ட்தோ என்னவோ, இவர்களுடைய ஆரோக்கியம் நன்றாக இருந்த்து. ஆனால் போதிய தண்ணீர் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே கழிவறையை உபயோகித்தால், வீட்டில் கிருமிகள் பெருகி, அவர்கள் ஆரோக்கியமும் பாதிக்கப் படும். இவற்றை எல்லாம் யாராவது யோசித்தார்களா தெரியவில்லை.
இந்த மாதிரி தொடர்ந்து தண்ணீர் கிடைத்தால் மட்டுமே கழிப்பறை கட்டியதன் நோக்கம் நிறைவேறும்.
இன்னும் இந்தியாவில் எத்தனை கிராமங்கள் வருட்த்தின் பெரும்பாலான நாட்களில் ஒரு குடம் தண்ணீருக்குப் பல மைல் தூரம் நடந்து செல்லும் நிலையில் உள்ளன? இவற்றிலெல்லாம் கழிப்பறைகள் கட்டி என்ன பயன்?
முதலில் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் திட்ட்த்தை நிறைவேற்றினால் தான் தூய்மை இந்தியா திட்டம் பலன் தரும்.
அப்பாடி, இனிமேல் என்னை யாரும் மோடிக்கு ஜால்ரா என்று சொல்ல முடியாது.
தரமற்ற முறையில் கட்டுவது கணக்கெடுப்பு நடத்த முடியும் ஆனால் உபயோகத்திற்குஆகாது இது சமத்துவபுரங்கள் மாதிரி தான் ஆகும்

No comments:
Post a Comment