1. இரட்டை இலை சின்னத்தை சின்னம்மா அணிக்கே தர வேண்டி தமிழக முன்னாள் முதல்வர்ஜெ. கையெழுத்திட்ட ஆவணம் தாக்கல். தேர்தல் கமிஷனர் அதிர்ச்சி.
ஆவணம் உண்மை என டிடிவி பேட்டி.. வேண்டுமானால் ஜெ. விடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் தகவல்.
ஆவணம் உண்மை என டிடிவி பேட்டி.. வேண்டுமானால் ஜெ. விடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் தகவல்.
2. சன் டிவியில் தீபாவளி தின சிறப்பு நிகழ்ச்சிகள் என க்ளிப்பிங்ஸ்கள் விளம்பரங்கள் வெளியீடு.. மக்கள் ஆர்வம்.
பின் மாலை முதல் பழையபடியே விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என பழைய பல்லவி..
பின் மாலை முதல் பழையபடியே விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என பழைய பல்லவி..
3. பெட்ரோல் விலை இனிமேல் வாங்கும் வண்டிகளுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும் என பெட்ரோல் கம்பெணிகள் அறிவிப்பு.. டுவீலர் எனில் லிட்டர் நூறு ரூபாய்.. கார் எனில் ஐநூறு ரூபாய் என விளக்கம்..இந்த விலைப்பட்டியல் மதியம் பணிரெண்டு மணி்வரைக்கும் எனவும் அதற்கு பின் விலை அறிவிக்கப்படும் எனவும் தகவல்.
4. மோடி ஆட்சியில் நாடு கவனிப்பார் அற்று கிடப்பதாக அருண் ஷோரி வருத்தம். திறமையாளர்கள், படித்தவர்கள்,பண்புள்ளவர்கள் மற்றும் தன்னைப் போன்ற அறிவாளிகளை மோடியும் மத்திய அரசும் மதிப்பதில்லை எனவும் வருத்தம் கலந்த பேட்டி.
5. புகழ் பெற்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை இந்தியாவில் மோடியின் அராஜகங்கள் என கட்டுரை வெளியிட்டுள்ளது.மோடியின் ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பயந்து வாழ்வதாகவும் பெண்கள், தாழ்த்தபட்டோர், ஒடுக்கப்ட்டோர் என அனைவரும் வெறுத்துப் போய் உள்ளதாக தெரிவித்து உள்ளது. இந் நிலையில் அந்தப் பத்திரிக்கையையும் கேடி ப்ரதர்ஸ் போன மாதமே வாங்கி விட்டதாக தகவல்கள் கசிகின்றன.
No comments:
Post a Comment