முதலில் மோட்டாரில் கெட்டிக்காரன் எவனுமில்லை என்பதில் இந்த பதிவினை ஆரம்பிக்க விரும்புகிறேன்...
எனது கார் ஒன்றில் சமீபத்தில் 70km/hr வேகத்தில் சென்றுகொண்டிருந்த போது திடீரென்று பிரேக் பிடிக்கவில்லை!
முன்னும் பின்னும் பேருந்துகளும் இருசக்கர வாகனங்களும் செல்கின்றன!!! முதலில் நான் பதட்டப்படாமல் பிரேக் பெடலை பம்ப் செய்து பார்த்தேன், பிரேக் ஆயில் குறைவு ஏதும் இருந்தால் பம்ப் செய்தால் பிரேக் பிடித்து விடும்... பம்ப் செய்வது என்பது பிரேக் பெடலினை திருபத்திரும்ப வேகமாக மிதித்து ரிலீஸ் செய்வதுதான். பம்ப் செய்தும் பிரேக் பிடிக்கவில்லை! பின் சாலையின் சூழலை வேகமாக பார்த்து இடைவெளிகளையும் வாகனங்கள் செல்லும் வேகத்தையும் கணித்துக்கொண்டு வேகமாக கியரை ஒவ்வொன்றாக குறைத்துக்கொண்டே முதல் கியருக்கு கொண்டு வந்தேன்.... அதே சமயம் வாகனத்தை பிற வாகனங்களில் மோதிவிடாமல் இடைவெளிகளை நோக்கி திருப்பி ஹெட்லைட் அமத்தியமத்தி எரியவிட்டு ஹாரனை அடித்து சாலையில் அனைவருக்கும் எச்சரிக்கை சமிக்கைகள் செய்துகொண்டே ஓட்டினேன்... பிறகு ஹேன்ட் பிரேக்கை (எமர்ஜென்சி பிரேக்/ பார்க்கிங் பிரேக்) மெதுவாக இழுத்தேன்... வாகனம் கட்டுப்பாட்டிற்குள் வந்து நின்றது...

செய்யக்கூடாதவை :
வண்டி பிரேக் பிடிக்கவில்லை என்றவுடன் பதட்டப்பட்டு வேகமாக ஹேன்ட் பிரேக்கை இழுத்தால் வயர் கட்டாகிவிடும்... படிப்படியாக முதல் கியருக்கு கொண்டு வந்தபின்தான் ஹேன்ட் பிரேக்கை இழுக்க வேண்டும்... ஹேன்ட் பிரேக் ஒன்றுதான் சேதாரத்தை குறைக்க ஒரே வழி......
இதுபோன்ற சூழல்களில் சீட் பெல்ட் போடாமல் இருந்தால் ஸ்டெரிங்கில் நெஞ்சு அடிபடவோ, கண்ணாடியில் தலை அடிபடவோ வாய்ப்புகள் இருக்கிறது!
சிலர் தங்கள் வாகனங்களில் ஹேன்ட் பிரேக் பழுதாகி பிடிக்காமல் இருப்பதை சரி செய்யாமல் இருப்பர்! ஹேன்ட் பிரேக் அவசர காலங்களில் உயிரை காக்கக் கூடியது என்பதை உணர்ந்து பழுதுபார்க்கவும்.....
எக்காரணம் கொண்டும் வண்டி ஓட்டும் போது எதிர்பாராத சூழல்களில் பதட்டப்படாமல் இருக்கவும்.....
முடிந்த அளவு முன் செல்லும் வண்டிக்கு பின்னால் போதிய இடைவெளியில் வண்டியை ஓட்டவும். அவசர காலங்களில் உயிரை காக்கக் இந்த இடைவெளி ரொம்ப முக்கியம்.......
தினமும் உங்கள் வண்டியில் பிரேக் ஆயில் அளவு, பிரேக் ஆயில் டியுப், டயரின் காற்றளவு, தேய்மானம் ஆகியவற்றை சரி பார்க்கவும்....
கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்துகொண்டு வண்டியை ஓட்டவும்........
கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்துகொண்டு வண்டியை ஓட்டவும்........
இதெல்லாம் நான் இணையம் மற்றும் NatGeo, Discovery Turbo தொலைக்காட்சிகள் வழியாக தெரிந்து கொண்டவை... எனக்கு ஆபத்து காலத்தில் உதவி உயிரை காப்பாற்றிவுள்ளது.......
மறந்துவிடாதீங்க வண்டி ஒட்டிக்கிட்டு போகும்போது பிரேக் பிடிக்கவில்லை என்றால்.........
1) பதட்டப்படாமல் இருத்தல்
2) சாலையின் சூழலை நன்கு பார்த்தல்
3) ஹார்ன் அடித்து எச்சரிக்கை செய்தல்
4) கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வருதல்
5)மெதுவாக ஹேன்ட் பிரேக்கை இழுத்தல்
6)ஓரமாக வண்டியை நிறுத்துதல் வேண்டும்.....

ஷேர் பண்ணுங்க உங்களுக்கும் உங்க நண்பர்களுக்கு எப்பொழுதாவது உதவலாம்!
No comments:
Post a Comment