லாயிட்ஸ் ரோடு தாய்வீட்டில் ஒரு நாள் எம்ஜிஆரை, பெரியவர் ஒருவர் காணவந்தார். எம்ஜிஆர் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்... அப்பெரியவர் எம்ஜிஆருடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்து பிறகு கிளம்பிவிட்டார்...
அப்பெரியவர் தான் "#ஜெனோவா" திரைப்பட இயக்குனர் திரு.நாகூர்...
அன்றிரவு எம்ஜி.சக்ரபாணி, எம்ஜிஆரிடம் "ராமச்சந்திரா, நாகூர் உன்ன வந்து பாத்துட்டுப்போனாரா? எதுக்காக..? அவரு நேத்து என்னே பாத்தபோது 'ஜெனோவா' படத்துக்கு அவரு கேட்ட கால்ஷீட்டுக்கு மேலே ஒண்ணரை பங்கு கொடுத்தாச்சு. இப்ப இருக்கிற உன் மார்க்கெட் சம்பளத்தையும் கொடுக்க ஒத்துக்கிட்டார்...அதன் பிறகும் ஏன் உன்னை வந்து பார்த்தார்...? இப்படி கேள்வி மேல் கேள்விகளை அடுக்கினார்.
அதற்கு எம்ஜிஆரின் நெகிழ்ச்சியான பதில் :
அண்ணா...! அவங்களுக்குப் படம் எடுக்கத் தெரியும், பிஸினஸ் தெரியாது. வித்த விலையைவிட செலவு ஜாஸ்தி ஆயிடுச்சு...டெக்னீஷியன்ஸ் எல்லாம் பிஸினஸ்மேன் ஆகிடமுடியாது...போதாகுறைக்கு அவர் மகள் இறந்ததுல மனசு உடைஞ்சு போயிட்டார். பாவம் அந்தப் பெரியவர் அழுதுட்டாரரு, என்னால தாங்கமுடியல..."
அதற்கு சக்ரபாணி, "அப்ப அவர் கொடுக்குற பணத்தை வாங்கினாப் போதும்னு முடிவு பண்ணிட்ட, அப்படித்தானே ???? "
"இல்லண்ணா...#அவர் #கொடுக்கவேண்டிய#இருபதாயிரத்தையும் #வேண்டாம்னுட்டேன்...#படத்தை#முடிச்சுத்தரேன் கவலைப்படாதீங்கன்னுட்டேன்" என்றார் எம்ஜிஆர் கூலாக...
அதற்கு சக்ரபாணி, "நீ சொல்றது சரிதான், இருந்தாலும் சம்பாதிக்கிற நேரத்துல தானப்பா சம்பாதிக்க முடியும்...? இப்படியே போனா நம்ம குடும்ப நிலைமை என்னாவது? நம்ம குடும்பநிலை உனக்குத் தெரியாதா? "
அதற்கு எம்ஜிஆர்,
"போவுது அண்ணா, பணத்தை விட மனுஷங்க பெரிசு. அவங்க நம்ம மேல வெச்சுருக்கிற அன்புக்கும், மதிப்புக்கும், நா செஞ்சது ஒண்ணும் பெரிசில்ல...
"போவுது அண்ணா, பணத்தை விட மனுஷங்க பெரிசு. அவங்க நம்ம மேல வெச்சுருக்கிற அன்புக்கும், மதிப்புக்கும், நா செஞ்சது ஒண்ணும் பெரிசில்ல...
மேலும் "நாளைங்கிறது நம்பளோடது கிடையாது...அது கடவுளோடது...விடுங்கண்ணா " ன்னு சொன்னார்.
என்ன செய்ய #பெரியவருக்கு #வீட்டுக்கவலை...#சின்னவருக்கு#ஊர்க்கவலை...
No comments:
Post a Comment