ஒவ்வொருவருக்கும் எது மனதை இதப்படுத்துமோ .. வருடிக் கொடுக்குமோ... தான் விரும்பும் உலகத்துக்கு எடுத்துச் செல்லுமோ அதை இளையராஜாவின் பாட்டு செய்து விடும். அந்த பாட்டு என்ன படம், யார் நடிகர்கள், என்ன கதை, யார் பாடலாசிரியர் என்பதையெல்லாம் தாண்டி இளையராஜா என்ற மகுடிக்காரருக்காகவே கேட்டிருப்போம் அவர் இசையமைத்த பாடல்களை.
வயலின் என்ற ஒரு வாத்தியத்தை இந்த கலைஞனை விட யாருமே இதை விட அம்சமாக உபயோகப்படுத்தி இருக்க முடியாது..
மெட்டி படத்தில் வரும் "மெட்டி ஒலி காற்றோடு " என்ற பாடலில் என்ன ஒரு haunting ஆனாலும் ஒரு cheerful ஆன இசையை தந்திருப்பார்.
பாடல் ஆரம்பிக்கும் "நாநன நன.." ஹம்மிங்கிலிருந்து என்ன மாதிரியான smooth transition ஐ கொண்டு வந்திருப்பார் அந்த பல்லவியின் முதல் வரிக்கு.
இந்த பாடலும் அதை காட்திப்படுத்திய விதமுமே ஒரு புதுமை தான். ஒரு ஆண் குரலும் பெண் குரலும் ஒலிக்கும் பாடல். கண்ணை மூடிக் கொண்டு பாடல் வரிகளை கேட்டால் காதலர்கள் பாடுவது போல் இருக்கும். இசையிலும் ஒரு காதல் வெளிப்பாபே எஞ்சி நிற்கும். ஆனால் காட்சியில் ஒரு இளம் தாயும் அவரின் வயதுக்கு வந்த இரு பெண்களுக்குள் இழையோடும் நட்பை பிரதிபலிக்கும். இப்போது மீண்டும் கேட்டுப் பார்த்தால், அதே வரிகளும் அதே இசையும் இந்த உறவை சொல்வதற்கும் மிகப் பொறுந்திப் போகும்.
மிக துல்லியமான composition இது.
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் என்னை வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்லும் பாடல்களில் இதுவும் ஒன்று.
No comments:
Post a Comment