5 சிவ தலங்களும்! 5 வேளை வழிபாடுகளும்! – இதுவரை நீங்கள் அறிந்திடாத அற்புதத் தகவல்
சிவதலங்கள் பற்றி நாமறிந்தவகள் சில, நாமறியாதவைகள் பல! அத்தகைய வேளைக்கு
ஒன்று என்ற விகிததத்தில் 5 வேளைக்கு வழிபடக்கூடிய 5 சிவ தலங்கள் குறித்த அற்புதமான ஆன்மீக தகவலை இங்கே காண்போம் வாருங்கள்
ஒரு நாளின் காலை முதல் நள்ளிரவு வரை ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டு முறையில் கலந்துகொண்டு தரிசனம் பெறும்வகையில் அமைந்த ஐந்து சிவ தலங்க ள் அதாவது பஞ்ச ஆரண்ய தலங்கள் ஆகும்.
ஒரே நாளில் ஒவ்வொரு (5) வேளை வழிபாட்டின்போதும் பஞ்ச ஆரண்ய (Panja Aaranya) தலங்களை தரிசிப்பதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி மறு பிறவி இல்லாத நிலையை அடையலாம்.
ஆரண்யம் என்றால் காடு என பொருள்படும். பஞ்ச ஆரண்ய தலங்கள் ஒவ்வொ ன்றிலும் ஒவ்வொரு வகைக் காடு அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இத்திருத்தலங்களில் விடியற்காலை, காலை, உச்சிவேளை, மாலை, அர்த்தசாமம் என ஐந்து முறை வழிபாடு நடத்தப்படுகிறது.
தஞ்சைக்கு அருகில் அமைந்துள்ள பஞ்ச ஆரண்ய தலங்கள் முறையே
1. திருகருக்காவூர் (Thirukavur) – விடியற்காலை (Early Morning)
2. அவளிவநல்லூர் (Avalivanallur) – காலை (Morning)
3. அரதைபெரும்பாழி (Aradhaiperumpazhi) – உச்சிவேளை (Noon)
4. ஆலங்குடி (Aalangudi) – மாலை (Evening)
5. திருக்கொள்ளம்புதூர் (Thirukollambuthur) – அர்த்தசாமம் (Mid-Night)
ஆகியவை ஆகும்.
திருஞானசம்பந்தர் தனது திருதலப் பயணத்தின்போது பஞ்ச ஆரண்ய தலங்களை முறைப்படி வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பஞ்சஆரண்ய தலங்க ள் யாவும் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளன.
No comments:
Post a Comment