Tuesday, October 10, 2017

பூஜையில் தேங்காயின் மகத்துவம் என்ன?


வீட்டிலும், கோயிலிலும் தேங்காய் உடைக்கும்போது, அது செம்மையாக உடைபட வேண்டும் என்று பக்தர்கள் ஆர்வத்துடனும் கவனிப்பார்கள். பூஜையின் பயனையும், வாழ்வின் எதிர்கால நிகழ்வுகளையும் உடைந்த தேங்காயின் பகுதிகள் உணர்த்துகின்றன என்று பக்தர்கள் நம்புகின்றனர். உடைத்த தேங்காயில் பூ இருப்பது மிகவும் மங்கலம். நூல் பிடித்தால்போல் சரிபாதியாக உடைவது சிறப்பு. பகுதிகளில் ஏற்ற இறக்கம் இருப்பதால் தவறில்லை. தொட்டில் போல உடைந்தால் மகப்பேறு கிடைக்கும் என்பர். குடுமிப்பகுதி மற்ற பகுதியை விட சற்று பெரிதாக உடைவது நல்லது.
ஓடு சிதறி முழு தேங்காய், கொப்பறை போல் விழுந்தால் அதை சரி பாதியாய் பிளந்து படைக்கலாம். தேங்காய் நீரை பாத்திரத்தில் பிடித்து அதை தீர்த்தமாக பயன்படுத்தலாம். உடைந்த தேங்காய் மூடிகளை மீண்டும் இணைத்து பொருத்தக்கூடாது. தேங்காய் ஒரே அடியில் இருபகுதிகளாக உடைவது மிக நல்லது.
உடைந்த தேங்காய் தேரை மோந்தும், அழுகியும் இருப்பதுகூடாது. சிதறுகாய்போல் உடைய கூடாது. குறுக்கில் உடையாமல் நெடுக்கில் உடைவது சரியல்ல. தேங்காயை உடைக்கும் போது நழுவினால் அபசகுனம். தேங்காயை பிரசாதமாக அனைவருக்கும் தரவேண்டும். அல்லது சைவ உணவு சமைக்க பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...