மங்கையரின் கரு விழியின் 27 விதமான அசைவுகளும் அவற்றின் உளவியல் காரணங்களும்
கன்னியரின் கடைக்கண் பார்வை பட்டால் காளையற்கு மாமலையும் ஓர் கடுகாம்… என பாரதிதாசன் சுலபமாய் சொல்லிவிட்டு போய்விட்டார். ஆனால் இங்கோ அந்த மங்கை யரின்
கரு விழியின் அசைவுகள் எத்தனை எத்தனை பொருள்தரு கிறது பாருங்கள். மங்கை யரின் கரு விழி அசைவு குறித்து விஞ்ஞானிகள் ஆய்ந்தாலும் அவர்களுக்கு புரியாத புதிராக இருக்கும். அத்தகைய மங்கையரின் கரு விழி அசைவுக்கு அனுபவ ரீதியாக உணர்ந்த பொருளை இங்கு காண விருக்கி றோம்.
அவை இதோ
1. கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது.
2. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது.
3. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.
4. கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது.
5. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது, ஆசைப்படுகிறது.
6. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது.
7. கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது.
8. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது.
9. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.
10. கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது.
11. கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது.
12. கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.
13. கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்.
14. கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்.
15. கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது.
16. கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது.
17. கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கி றது.
18. கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது.
19. கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் காம வயப்படுகிறது.
20. கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்பு கிறது.
21. கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது.
22. கண்களை கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது.
23. கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.
24. கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது.
25. கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது.
26. கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை.
27. கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்.
குறிப்பு – மேற்கூறப்பட்டவைகளில் பெரும்பாலானவைகள் ஆணுக்கும் பொருந்தும்
வாட்ஸ் அப்பில் வந்த தகவல் – சிறு மாறுதல்களுடன் மெருகூட்டியது
No comments:
Post a Comment