🥝🍉🍌🥥🍋🍍🍑🍊🍐
*நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?*
*நெய் தரும் பயன்கள் சில.....!!*
🥦 நெய் உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பால் பொருட்களில் ஒன்றான நெய் கூடுதல் சுவையும், நறுமணத்தையும் தரவல்லது.
🥒சிலர் நெய் இல்லாமல் உணவு உட்கொள்ள மாட்டார்கள். ஆனால், இன்னும் சிலர் நெய் என்றாலே சற்று ஒதுங்கி தான் நிற்பார்கள். ஏனென்றால் நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடுமோ என்ற பயம் தான்.
🥕நெய்யில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பை கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
🌽 நெய்யினால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
*நெய்யின் நன்மைகள்
🍏தினமும் நெய் சேர்ப்பது உடல்நலம் மற்றும் மனநலனுக்கு உகந்தது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
🍐கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் சிறந்தது. ஏனெனில் நெய்யானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து குறைத்துவிடும்.
🥥 வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்துவிடும்.
🍋நெய் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
🍒 வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய்படாமல் இருப்பார்கள்.
🍑செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
🍌நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்க வைட்டமின்கள் உள்ளன. எனவே, தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களை பெறலாம்.
🍊குடற்புண் உள்ளவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும்.
🍉கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
🍅வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் தேய்மானம் எதுவும் ஏற்படாமல், அவைகள் நன்கு செயல்படுவதற்கு உதவும். இதனால் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
🍇நெய் எளிதில் ஜீரணமாகி விடும். சாப்பிட்டவுடன் அவை கொழுப்பாக உடலில் தங்கப்படுவதில்லை. மாறாக எனர்ஜியாக எரிக்கப்படுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கப்பட்டுள்ளது
🍐🍋🍒🥥🍑🍌🍊🍉🍅
🍐🍋🍒🥥🍑🍌🍊🍉🍅
No comments:
Post a Comment