Sunday, April 1, 2018

யோகியார் கல் என்றாயே என் அப்பனுக்கு உயிர் உள்ளது.

யோகிராம் சூரத்குமார் முன் வந்து வணங்குகிறார் அந்த மனிதர்
என்னை எதுக்கு வணங்குகிறாய் நீ
அதோ என் பாதர் அவரை விழுந்து வணங்கு என்று கை காண்பிக்கிறார் யோகியார்
திருவண்ணாமலை யில் ஒரு மகான் இருக்கிறார் என்று இவரை வணங்க தொலைவில் இருந்து வந்தால் இவர் நம்மை வேறு எங்கோ பார்த்து வணங்க சொல்கிறாரே என்று அந்த மனிதர் பின்னால் யாரும் இல்லை
அழகாக ஆங்கிலத்தில் சொல்கிறார் யோகிராம் சூரத்குமார்
இதோ என் தந்தை மலை வடிவில் காட்சி தருகிறார் பார்
அவரை பார்த்து விழுந்து வணங்கு
இந்த பிச்சைக்காரனை வணங்க தேவையில்லை என்கிறார்
வந்தவர் கேட்கிறார் அது வெறும் மலை தானே கல்லை எதுக்கு நான் வணங்க வேண்டும் மகான் என்று உங்களைப் பற்றி கேள்விப்பட்டு உங்களைத் தான் வணங்க வந்தேன் என்று அவர் மறுக்கிறார்
அன்று ஆசி வாங்க வந்த யாரிடமும் சொல்லாமல் இவரிடம் மட்டும் எதற்கு யோகியார் இப்படி செய்ய சொல்கிறார் என்று அருகில் இருந்தவர்களுக்கு புரியவில்லை
மகான் என்று அவரைப் பற்றி கேள்விப்பட்டு வந்த நீங்கள் அவரின் வார்த்தை புறக்கணித்து பேசுவது சரியா?
அவர் சொன்னால் அர்த்தம் இருக்கும் செய்து பாருங்களேன் என்று யாரோ ஒருவர் சொல்ல
வந்த மனிதர் வேறு வழியில்லை என்று பாதி மனதோடு மலையை பார்த்து கை கூப்பி வணங்கியிருக்கிறார்
அப்போது அவர் கண்ட காட்சி அவராலே நம்ப முடியவில்லை
மீண்டும் கண்களை கசக்கிக் கொண்டு பார்க்கிறார்
மலை வடிவம் தற்போது கற்கள் நிறைந்த வடிவாக தெரியவில்லை
ஒரு முழு வடிவ லிங்கம் நிற்பதாகவே காட்சி தந்து இருக்கிறது
அந்த லிங்க வடிவம் உயிர் உள்ள உருவம் போலவே தன்னை சுருக்கி விரித்து மூச்சு விடுவதைப் போலவே அந்த மனிதரின் கண்களுக்கு காட்சி தந்து இருக்கிறது
அதைப் பார்த்த மனிதர் வெலவெலுத்துப் போய்விட்டார்
அய்யோ பகவானே என்று சாஷ்டாங்கமாக மலையை பார்த்து விழுந்து வணங்கி
யோகிராம் சூரத்குமார் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாராம்
அப்போது யோகியார் கல் என்றாயே என் அப்பனுக்கு உயிர் உள்ளது என்று உணர்ந்தாயா என்று தன் தாடியை தடவிக் கொண்டே கேட்டு இருக்கிறார் அந்த மனிதரிடம்
பொதுவாக திருவண்ணாமலை க்கு புதிதாக வருபவர்களும் சரி நீண்ட நாள் கழித்து வருபவர்களும் சரி
திருவண்ணாமலை க்கு சற்று தொலைவில் காட்சி தரும் மலை வடிவத்தை கண்களால் பார்க்கும்போதே கை கூப்பி வணங்கி விடுவார்கள் அல்லது இறைவடித்தை நினைத்து மனதிற்குள் வேண்டிக் கொள்வார்கள்
இந்த மனிதர் தூரத்தில் இருந்து பார்க்கும் போதும் சரி யோகியாரை தரிசிக்க போகும் போதும் சரி இந்த மலையை கல் என்றே உணர்ந்து வணங்காமல் இருந்தவரை பார்த்து தான் மலையை முதலில் வணங்க சொல்லி இருக்கிறார்
அது வெறும் பாறை இல்லை பரமசிவன் லிங்க வடிவம் தான் இந்த மலை என்று உணர்த்தியும் இருக்கிறார்
இந்த அனுபவத்தை பிற்காலத்தில் அந்த மனிதரே ஒரு விழாவில் பகிர்ந்து கொண்டது
தற்போது திருவண்ணாமலை க்கு ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் நூற்றுக்கணக்கான பசுக்களை வளர்த்து வருகிறார்
அடிமாட்டுக்கு விலை போன உயிர்களை வாங்கி வந்து
உன்னதமான சேவையை செய்து வருகிறார்
நன்றி.Image may contain: indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...